Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் வாக்குவாதம்.. விசாரணையின்போது மயங்கி விழுந்த காவலர் ஆறுமுகபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்குநேரியில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் விவகாரத்தில் பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் ஆறுமுகப்பாண்டியன் துறை ரீதியிலான விசாரணையின் போது மயங்கி விழுந்ததார்.

நாங்குநேரியில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் விவகாரத்தில் பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் காவலர் ஆறுமுகப்பாண்டியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை பரிந்துரை செய்தது.

Police constable Arumugapandiyan who refuses to buy ticket in TNSTC bus fainted during investigation

இந்த நிலையில், இந்த விசாரணையின் போது காவலர் ஆறுமுகப்பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன் தலைமையில் ஆறுமுகபாண்டியன் உள்பட 8 ஆயுதப்படை போலீசார் கடந்த 20-ந் தேதி அன்று புழல் சிறையில் இருந்து மதுரைக்கு 4 கைதிகளையும், பாளையங்கோட்டைக்கு 7 கைதிகளையும் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். சிறையில் கைதிகள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன் தன்னுடன் வந்த போலீஸ்காரர்களை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளார்.

பின்னர் கடந்த 21 ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் பாளையங்கோட்டை சிறை வளாகத்துக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில்தான் ஆயுதப்படை போலீஸ்காரர் ஆறுமுகபாண்டியன் நாங்குநேரியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு வந்த போது நாங்குநேரி பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் சம்பந்தப்பட்ட காவலர் ஆறுமுக பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு ஆலந்தூரில் உள்ள காவலர்களுக்கான மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர், எழும்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

காவலர் ஆறுமுகபாண்டியன் மன அழுத்ததில் இருந்ததால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உளவியல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் இருந்து, காவலர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தின் நடத்துநர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது அந்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார்.

அரசு பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான், எங்களுக்கும் டிக்கெட் கிடையாது எனக் கூறி டிக்கெட் எடுக்க மறுத்தார். இதனைத் தொடர்ந்து நடத்துநர், அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். வாரண்ட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

எனினும், அவரது பேச்சை ஏற்க மறுத்த காவலர், "எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாங்க. போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் எங்கு வேண்டுமானாலும் கட்டணம் இன்றி பயணம் செய்கிறார்களே.. நாங்களும் அரசு ஊழியர்கள் தான். எனவே டிக்கெட் எடுக்க முடியாது" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, நடத்துநர், பேருந்தை ஒரு இடத்தில் நிறுத்தச் சொல்லி, டிக்கெட் எடுக்காவிட்டால் பேருந்தை எடுக்க முடியாது எனக் கூறினார். தலைமைக் காவலர் ஒருவர் வந்து, வாரண்ட் இல்லாமல் கட்டணம் இன்றி பயணிப்பது சரியல்ல, எனக் கூறி, காவலரை டிக்கெட் எடுக்குமாறு கூறினார்.

அப்போதும், அந்தக் காவலர், "எல்லா அரசு ஊழியர்களுக்கும் ஒரே ரூல்ஸ் தான். போக்குவரத்து துறை ஊழியர்களை மட்டும் இலவசமாக பயணிக்க அனுமதிக்கிறீர்கள், நான் டிக்கெட் எடுக்க மாட்டேன். பஸ்ஸை விட்டு இறங்க முடியாது" என வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து, பயணி ஒருவர் காவலரிடம் நானே உங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கிறேன், பிரச்சனையை விடுங்கள் எனக் கூற, காவலர் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. பயணிகள் தலையிட்டு சமாதானம் பேசிய நிலையில், பின்னர் அந்த காவலர் டிக்கெட் எடுப்பதாக கூறியதும் பேருந்து அங்கிருந்து கிளம்பியது.

அரசுப் பேருந்தில் காவலருக்கும், நடத்துநருக்கும் இடையே நடந்த இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. காவலர், அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்து இருந்தது.

வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரங்களிலும், காவலர்கள் டிக்கெட் எடுத்து தான் பயணிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+