ராமநவமியில் ராம ரத யாத்திரை நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுப்பு! ஹைகோர்ட்டில் விளக்கம்
சென்னை: இந்து மக்கள் கட்சி தரப்பில் ராமநவமி தினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
ராம நவமி தினத்தையொட்டி வரும் ஏப்ரல் 6-ம் தேதி சேலம் அயோத்தியப்பட்டினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில்,இந்து மக்கள் கட்சி சார்பில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி ராம நவமி தினத்தையொட்டி சேலம் அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராம ரத யாத்திரை நடத்த திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரத யாத்திரை சிறப்பு பூஜைகளுடன் சேலம் அயோத்தியாபட்டினம் தொடங்கி, உடையப்பட்டி அம்மாப்பேட்டை ரவுண்டானா வழியாக சவுந்தரராஜா பெருமாள் கோவிலில் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சின்னக்கடை, பெரியக் கடை வீதி வழியாக செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் நிறைவடைகிறது.
இது தொடர்பாக அனுமதி கோரி தமிழக அரசு, காவல்துறை ஆகியோருக்கு மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபி, சேலம் அம்மாப்பேட்டை உதவி ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி அனுமதி மறுத்து உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, காவல் துறை அனுமதி வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications