சீறிப்பாய்ந்த குண்டு.. மயங்கி சரிந்த காக்கா தோப்பு பாலாஜி! அவர் தான்னு தெரியல..போலீஸ் சொன்ன விளக்கம்
சென்னை: சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது தொடர்பாக காவல்துறை வடக்கு இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில்,"போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய போது அது காக்கா தோப்பு பாலாஜி என்பதே தெரியாது" எனக் கூறியிருக்கிறார்.
சென்னை 7 கிணறு பகுதியைச் சேர்ந்த காக்கா தோப்பு பாலாஜி. அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். யுவராஜ் என்ற ரவுடி மூலம் ரவுடி உலகில் காலடி எடுத்து வைத்தவர், பின்பு யார் பெரியவர் என்ற பிரச்சினையில் அவரையே போட்டு தள்ளி பெரிய ரவுடியாக மாறினார்.

தற்போது சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனுக்காக பல கொலைகளை செய்த காக்கா காப்பு பாலாஜி, வடசென்னை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக பிற ரவுடிகளை கொலை செய்தார்.
காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை கொள்ளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் பல கொலை வழக்குகளில் சிக்கித் தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை இன்று போலீசார் சுற்றி வளைத்தனர். வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே ஒரு குடியிருப்பில் காக்கா தோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து கொடுங்கையூர் போலீசார் அதிகாலையில் காக்கா தோப்பு பாலாஜியை சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரை தாக்கி விட்டு செல்ல முயன்ற காக்கா தோப்பு பாலாஜி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சரவணன் துப்பாக்கியால் சுட இடது மார்பில் குண்டு பாய்ந்து காக்கா தோப்பு பாலாஜி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.
இந்த நிலையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது தொடர்பாக காவல்துறை வடக்கு இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில்,"போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய போது அது காக்கா தோப்பு பாலாஜி என்பதே தெரியாது எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர்,"காவல்துறையினர் வழக்கமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்துள்ளனர்.
சோதனையில் அந்த வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் திடீரென அந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு மர்ம நபர் தப்பிய நிலையில் கஞ்சாவுடன் தப்பி சென்றவரை தான் காவல்துறை அதிகாரிகள் விரட்டி சென்றுள்ளனர். அந்த நபர் வியாசர்பாடி குடியிருப்பில் பதுங்கியுள்ளார். இதை அடுத்து சுற்றி வளைத்த போலீசாரை, நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் காவல் வாகனங்களில் குண்டு பாய்ந்தது.
இதை அடுத்து தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. போலீசார் நடத்திய தாக்குதலில் அந்த நபருக்கு இடது மார்பில் காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை சோதிக்கும் போதும் உயிர் இருந்திருக்கிறது. தாக்குதலுக்கு பிறகு தான் அந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என்பதே போலீசாருக்கு தெரியவந்தது. காக்கா தோப்பு பாலாஜி மீது ஏற்கனவே 58 வழக்குகள் நிறுவையில் இருக்கிறது. பாலாஜியுடன் காரில் வந்த மற்றும் நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காரில் இருந்து 10 கிலோ கஞ்சா அறிவு உள்ளிட்ட பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என கூறினார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications