தமிழகத்தில் வடமாநிலத்தவர் குறித்த வதந்தி பரப்பியவரின் போன் நம்பரை பிடித்த போலீஸ்.. சிக்கும் விஷமிகள்
போலி ட்விட்டர் கணக்கு மூலம் வதந்தி பரப்பியவரின் செல்போன் எண் கண்டுபிடிப்பு
சென்னை: போலி ட்விட்டர் கணக்கு மூலம் வட இந்தியர்கள் குறித்து வதந்தி பரப்பியவரின் செல்போன் எண்ணை கோவை போலீஸார் கண்டறிந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் முதல் பானிபூரி கடை வரையில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு அதிக பணி நேரம், குறைந்த கூலி கொடுக்கப்படுகிறது.
எனினும் அவர்களுடைய மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக குடும்பத்தினரை விட்டுவிட்டு பிழைப்பதற்காக வருகிறார்கள். பலர் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கார்டு வாங்கிக் கொண்டு குடும்பத்துடனும் செட்டில் ஆகியுள்ளார்கள்.

தமிழக அரசு
தமிழக அரசின் நலத்திட்டங்களையும் பெற்று பயனடைகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவின. வேறு சில மோல் சம்பவங்களின் வீடியோ காட்சிகளை தவறாக இணைத்து பொய்யான தகவல் பரவியதால வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

தமிழகத்தை விட்டு வெளியேறுதல்
இதனால் பலர் தமிழகத்தை விட்டு வெளியேற தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ விவகாரம் பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக நேரில் ஆராய்வதற்கு அந்த மாநில அரசு அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது.

சமூகவலைதளங்கள்
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் வெளியாகும் தாத்குதல் வீடியோ பதிவுகள் வதந்தி ஆகும். எனவே வடமாநில தொழிலாளர்கள் இதனை நம்ப வேண்டாம் என போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு இந்தி மொழியில் சமூகவலைதளங்களில் ஒரு பதிவை போட்டிருந்தார். தமிழ்நாட்டில் வடாநில தொழிலாளர்கள் எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்தார்.

வடமாநில தொழிலாளர்கள்
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்தி பரப்பியது தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய நபர்களை பிடிக்க டெல்லி, பீகாருக்கு தனிப்படை சென்றுள்ளது.

வடமாநிலத்தவர்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் கொலை செய்யப்பட்டதாக பொய்யான ஒரு வீடியோவை பரப்பிய நபரின் செல்போன் எண்ணை போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். குற்றவாளிகளை பிடிக்க உதவி ஆணையாளர் சரவணன் தலைமையில் தனிப்படை காவலர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளார்கள். செல்போன் எண்ணை வைத்து குற்றவாளிகளை கோவை போலீஸ் தேடி வருகிறது.
-
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications