குடும்ப தகராறு.. வீட்டுக்கு வர மறுத்த மனைவி.. பெயிண்டர் செய்த கொடூர செயல்.. அதிர்ந்துபோன சென்னை
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2--வது தெருவை சேர்ந்தவர் ஓம் முருகன். பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்த தமிழரசி அருகிலுள்ள சாஸ்திரி நகரில் தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

ஆசிட் வீசினார்
புதுவண்ணாரப்பேட்டையில் மூன்று மாதத்திற்கு முன்பு செல்போன் கடையை தமிழரசி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடைக்கு வந்த ஓம் முருகன் சேர்ந்து வாழும்படி மனைவியை வற்புறுத்தி உள்ளார். இதற்கு தமிழரசி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓம் முருகன், தான் மறைத்து வைத்திருந்த பாத்ரூமுக்கு பயன்படுத்தும் ஆசிட்டை தமிழரசி முகத்தில் ஊற்றி தப்பி சென்றுவிட்டார்.

பெயிண்டர் கைது
இதனால் தமிழரசி கை மற்றும் முகம் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அதே பகுதியில் மறைந்திருந்த ஓம்முருகனை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஓம் முருகன் மனைவி ஆசிட் வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சக்கையா (39). இவர் தனது உறவினர்கள் 13 பெண்கள் உட்பட 15 பேருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்கு வேனில் கிளம்பி சென்றுள்ளனர். ஈராச்சியை சேர்ந்த காமராஜ் (45) என்பவர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார். சாத்தூர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பார்சல் வாகனத்தில் மோதியது.

14 நபர்களுக்கு காயம்
இந்த விபத்தில் வேனில் இருந்த 12 பெண்கள் உட்பட 14 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் 3 ஆம்புலன்ஸ் வாகனங்களில் காயமடைந்தவர்களை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த 6 பெண்கள் உட்பட 8 பேரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
24 மணி நேரமும் விடாம சுத்துவாங்க.. தமிழக பெண்களுக்காக வந்த சிங்கப்பெண் படை.. வாட்ஸ்-அப் நம்பர் வருது -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications