லிவ்விங் டு கெதர்.. கல்யாணம் செய்ய மறுத்த சென்னை இளைஞர்.. பாடம் கற்பித்த இளம் பெண் !
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லிவ்விங் டு கெதரில் வாழ்ந்த இளைஞர் திருமணத்துக்கு மறுத்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்விங் டு கெதர் கலச்சாரம் சென்னையில் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.. அதை மெய்பிக்கும் வகையில் பல்வேறு சம்பங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இந்த கலாச்சார முறை சரியா தவறா என்பதை இப்போது விவாதிக்க வேண்டாம். ஆனால் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் சமூகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை

சம்பவம்
அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லிவ்விங் டு கெதரில் வாழ்ந்த இளைஞர், ஆசை தீர்ந்த உடன், அதாவது சலிப்பு தட்டிய உடன் திருமணத்துக்கு மறுத்துவிட்டார்.

தாயார் உடல் நிலை
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்(24), இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீராமின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்து கொள்ள காதலியை வீட்டிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார்.

எல்லை மீறினர்
உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீராமின் தாயாருக்கு அந்த பெண் உதவியாக இருந்து வந்த போது, இரண்டு மாதங்கள் ஸ்ரீராம் வீட்டில் வசித்துள்ளார். அப்போது ஸ்ரீராம் நாம் திருமணம் செய்து கொள்ளபோகிறோம் என ஆசை வார்த்தை கூறி கட்டாயமாக உடலுறவு கொண்டதாகவும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் கூறப்படுகிறது. தாலி கட்டாமலேயே இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

காதலி வேதனை
ஸ்ரீராமின் மோகம் 60 நாள்களில் முடிந்து போனது. ஒருகட்டத்தில் ஸ்ரீராம் , தன் காதலியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வற்புறுத்தியும் ஸ்ரீராம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் அவரது காதலி வேதனை அடைந்தார்.

சிறையிலடைப்பு
இதையடுத்து சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதையடுத்து ஸ்ரீராம் மீது பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications