Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாப்பாட்டில் விஷம் கலந்து.. கணவனை கொலை செய்த கொடூர மனைவி... அதிர்ச்சியில் உறைந்த தலைநகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சாப்பாட்டில் விஷம் வைத்து கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேடு கண்ணகி தெருவில் வசித்து வந்தவர் செல்வம்(42). பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி விஜயலட்சுமி(38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். .செல்வம் கடந்த 2-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வம், கடந்த 6-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செல்வத்தின் உறவினர் வீரபாண்டியன் என்பவர் சூளைமேடு போலீசில் புகார் கொடுத்தார்.

 பிரேத பரிசோதனை அறிக்கை

பிரேத பரிசோதனை அறிக்கை

அதன்பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வம் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்ததும், இதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனால் உடனடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியை தேடினார்கள். தலைமைறைவாக இருந்த விஜயலட்சுமியை மடக்கி பிடித்தனர்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

மேலும், விஜயலட்சுமி உடன் இருந்த மோகன் என்ற முண்டக்கண்ணு என்பவரையும் போலீசார் பிடித்தனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வேலைக்கு மெட்ரோ ரயிலில் செல்லும்போது விஜயலட்சுமிக்கும், மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவருக்கும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம், செல்வத்துக்கு தெரியவந்ததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து

பூச்சிக்கொல்லி மருந்து

தகாத உறவை கைவிடும்படி கூறியுள்ளார். இதனால் விஜயலட்சுமியும், மோகனும் சேர்ந்து செல்வத்தை கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி கடந்த 2-ம் தேதி செல்வம் சாப்பிடும் பழைய சோறில் விஜயலட்சுமி பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட செல்வம் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த விஜயலட்சுமி, செல்வம் மதுபோதைக்கு அடிமையாகி உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் சேர்த்ததாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்துள்ளார். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையிலும், தீவிர விசாரணையிலும் விஜயலட்சுமியும், கள்ளக்காதலன் மோகனும் வசமாக மாட்டிக் கொண்டது தெரியவந்தது.

இருவரும் கைது

இருவரும் கைது

இதனை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கணவனை கொலை செய்த விஜயலட்சுமி, அவரது கள்ளக்காதலன் மோகன் இருவரையும் கைது செய்தனர். மோகனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டமாகும். மோகன் மீது சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 7 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+