எக்ஸ்ட்ரா சர்வீஸ்.. மசாஜ் சென்டர்களில் பலான தொழில்! சென்னை போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்.. ஜம்ப் அடித்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், 6 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். போலீசாரின் சோதனயின் போது தப்பியோட முயன்ற ஒரு பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் இதேபோன்று சோதனை தொடரும் என்கின்றனர் மாநகர போலீசார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வரும் கும்பலை கொத்துக் கொத்தாக கைது செய்தனர் சென்னை காவல்துறையினர். இது தொடர்பாக 55 மசாஜ் சென்டர்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

crime chennai police

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அனைவருமே கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள், சிலர் 18 வயதுக்குட்பட்ட மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பா என்ற பெயரில் வேலைக்கு அழைத்து வரும் பெண்களுக்கு சம்பளம் தவிர்த்து கூடுதலாக பணம் வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதோடு தொடர்ந்து அவர்கள் தனிமையில் இருக்கும் வீடியோவை எடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் தெரிய வந்தது.

இந்த கும்பல் குறித்த விசாரணையில் இறங்கிய போது, பிரபல ரவுடி ஒருவரின் தொடர்பு இருப்பதாக சென்னை காவல்துறையினருக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று கிடைத்தது. கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாமல் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளையும் இதேபோல பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது சென்னை போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஸ்பார் என்ற பெயரில் பாலியல் தொழிலில் பெண்களை போலிசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களாக சென்னையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் செய்த கும்பலின் நடமாட்டம் குறைந்திருந்த நிலையில், அண்ணா நகர், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் அவர்கள் கிளைகளை திறந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் மீண்டும் சோதனையை துவக்கியுள்ளனர் போலீசார்.

நேற்று சென்னையில் நேற்று முன் தினம் எத்திராஜ் கல்லூரி அருகே இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு சோதனை நடத்தினர். போலீசார் வந்ததையறிந்து அந்த ஸ்பாவில் இருந்த பெண்கள் பயந்து போய் தப்பியோட முயன்றனர். 4 பெண்கள் அந்த கட்டிடத்தின் 2ஆம் மாடியில் ஜன்னலுக்கு பின்னர் மறைந்துள்ளனர். இதனையடுத்து அங்கும் போலீசார் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு பெண் ஜன்னால் வழியாக கீழே குதித்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அதிக உயரத்தில் இருந்து கீழே குதித்ததால், அவருக்கு இடுப்பு, கால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஷாக் ஆன போலிசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அங்கிருந்த பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் மசாஜ் செண்டர் நடத்தி வந்த இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலிசார் விசாரணை மேற்கொண்ட போது, பெண்கள் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இதேபோன்று சோதனை தொடரும் என்றும், ஸ்பாக்களில் பாலியல் தொழில், போதைப் பொருள் விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீசார் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+