Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத புகார்.. ரோகிணி தியேட்டரின் டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் சென்னை ரோகிணி தியேட்டரில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர் குமரேசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பத்து தல படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாக வேண்டியது.

ஆனால் சில காரணங்களுக்காக அப்போது வெளியாகவில்லை. பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் இந்த படம் வெளியானது. பத்து தல என்ற பெயர், சிம்புவின் போஸ்டர் போன்றவற்றால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.

மலையாள படம்

மலையாள படம்

இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் என்பதாலும் சிம்புவுக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் இருக்கும் என்பதாலும் இந்த படத்தின் மீது ஹைப் எகிறியது. இந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. சிம்பு படத்திற்காக சென்னை கோயம்பேடு திரையரங்கில் காலை 6 மணி முதலே ரசிகர்கள் காத்திருந்தனர். அவரது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பூசணிக்காயால் திருஷ்டி சுத்தி போட்டனர்.

காட்சி ஆரம்பிப்பதற்கு முன்

காட்சி ஆரம்பிப்பதற்கு முன்

இதையடுத்து காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் ரசிகர்களை ஊழியர்கள் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது நரிக்குறவர்கள் சிலர் வரிசையில் வந்து டிக்கெட்டை நீட்டினர். அங்கிருந்த ஊழியரோ அவர்கள் வெளியே செல்லுமாறு சைகை காட்டினார். எங்களிடம் டிக்கெட் இருக்கிறதே உள்ளே அனுப்புங்கள் என்றனர்.

வெளியேற்றிய ஊழியர்

வெளியேற்றிய ஊழியர்

ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் அவர்களை வெளியேறுமாறு கூறினார் ஊழியர். இதை சிம்பு ரசிகர்களும் கண்டித்தனர். இதையடுத்து இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரோகிணி திரையரங்கில் நடந்த செயலுக்காக எம்பி செந்தில் குமார், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

உரிமையாளர் விளக்கம்

உரிமையாளர் விளக்கம்

இந்த நிலையில் ரோகிணி திரையரங்க உரிமையாளர் பன்னீர் செல்வம் அளித்த விளக்கத்தில் இந்த படம் யுஏ சான்றிதழ் கொண்டது. இந்த சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அனுப்பக் கூடாது. அதனால்தான் ஊழியர் அவர்களை அனுமதிக்கவில்லை. மற்றபடி அவர்கள் நரிக்குறவர்கள் என்பதற்காக உள்ளே அனுமதிக்கவில்லை என்பது தவறு என்றார்.

நரிக்குறவர்கள்

நரிக்குறவர்கள்

ஆனால் இதுகுறித்து அங்கிருந்தோரிடம் கேட்ட போது , நரிக்குறவர்களை போல் குழந்தையுடன் வந்த மற்றவர்களை அனுமதித்த போது மட்டும் அந்த படம் யுஏ படமில்லையா? இவர்கள் கொடுக்கும் விளக்கம் எல்லாம் பொய். நீங்கள் வீடியோவை பாருங்கள். அந்த ஊழியர் நரிக்குறவ பெண்ணிடம் எத்தனை மோசமாக நடந்து கொண்டார். சைகை காட்டி வெளியேறுமாறு கூறினார். ஏன் அவர்களிடம் இது குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் அல்ல. அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வாருங்கள் என சொல்லவில்லை என கேள்வி எழுப்பினர்.

உரிமையாளர்கள்

உரிமையாளர்கள்

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சிலர் கூறுகையில் ஏ படத்திற்குத்தான் குழந்தைகளை அனுமதிக்க மாட்டோம். இது யுஏதானே அனுமதிக்கலாமே என்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் ரோகிணி தியேட்டரில் விசாரணை நடத்தினர். அங்கு ஊழியர்களிடம் என்ன நடந்தது, எதற்காக நரிக்குறவர்களை உள்ளே விடவில்லை போன்ற கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். அது போல் வட்டாட்சியரும் நேரில் வந்து விசாரணை செய்தார். இந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர் குமரேசன் மீது கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+