Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பெண்களிடம் தங்க நகை பறிக்கும் நயவஞ்சக நளினிகள்.. நம்பவே முடியாத தில்லாலங்கடி பாணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெண்களை குறிவைத்து மயக்க மருந்து கலந்த பொருட்களை கொடுத்து நகைகளை பறிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னை அயனாவரத்தில் பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் ஒருவரிடம் நகை பறித்ததாக தாயும், மகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் எச்சரித்துள்ளனர். இதுபற்றி பார்ப்போம்.

சென்னையில் பெண்களிடம் பெண்களே நகை பறிக்கும் கலாசாரம் தற்போது அதிகரித்துள்ளது. மயக்க மருந்து கலந்த பொருட்களை கொடுத்து மயக்கி பெண்களிடம் நகைகளை பறிப்பது அதிகரித்துள்ளது. நகைப்பறிப்பில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் சாதாரண இல்லத்தரசிகள் போலவோ அல்லது கல்லூரிப் பெண்கள் போலவோ உடை அணிந்து வருகிறார்கள்.

Police issue warning about women who snatch gold jewellery from women in Chennai

வழியில தனியா வர்ற வயசான பெண்களை நிறுத்தி, ரொம்ப மரியாதையா "அம்மா, இந்த அட்ரஸ் எங்க இருக்கு?"ன்னு கேட்டு அவங்க கவனத்தைத் திசைதிருப்புவார்கள். சில நேரங்களில் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு உதவி கேட்பது போல நடித்து, அருகில் வந்தவுடன் நகையைப் பறிக்கிறார்கள். ஒரு பெண் குழந்தையோடு வரும்போது யாருக்கும் சந்தேகம் வராததுதான் இவர்களுக்குப் பெரிய சாதகம் ஆகும்.

சென்னை மாநகரப் பேருந்துகள்மற்றும் புறநகர் ரயில்களில் இந்த 'லேடி கேங்' ரொம்ப ஆக்டிவாக இருக்கிறார்கள். ஏறும்போதும் இறங்கும்போதும் தள்ளுமுள்ளுவை ஏற்படுத்தி, ரொம்ப நைஸா தங்கச் சங்கிலியை அறுத்துவிடுவதும் நடக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் கத்தினால் கூட, "நானும் ஒரு பொண்ணுதான், என் மேல எப்படி சந்தேகம் வரலாம்?"னு சென்டிமென்டா பேசி அங்கிருந்து நழுவிவிடுவதும் நடக்கிறது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்த தங்கம்மாள் என்பவரிடம் மயக்க மருந்து கலந்த ஜீஸ் கொடுத்து 5 பவுன் நகையை பறித்த அதே மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த நான்சி நிஷா என்பவர் கைதானார். சிறையில் அடைக்கப்பட்ட நான்சி நிஷா 2 வாரங்களில் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த உடன் நான்சி நிஷா மீண்டும் கைவரிசையை காட்டியுள்ளார். தான் வேலைபார்த்த எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு நர்சாக வேலை பார்க்கும் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுனதா (வயது 31) என்பவரிடம் அன்பாக பேசியிருக்கிறது. நான்சி ஜெயிலுக்கு போன விஷயம் சுனதாவுக்கு தெரியவில்லை. இதனால் நான்சியுடன் அவர் அன்பாக பழகி இருக்கிறார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நான்சி நிசா, சுனதாவின் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார்.

சுனதாவும் நம்பிக்கையுடன் அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வழியில் சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு நான்சி அழைத்துள்ளார். சுனதாவும் நான்சியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் வைத்து மயக்க மருந்து கலந்த காளான் சூப்பை சுனதாவுக்கு கொடுத்துள்ளார். அதை குடித்த சுனதா உடனே மயங்கி விழுந்துவிட்டார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை நான்சி கழற்றி வைத்து கொண்டார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த சுனதா தனக்கு என்ன நேர்ந்தது என்று நான்சியிடம் கேட்டுள்ளார். திடீரென்று மயக்கமாகிவிட்டாய் என்றும், இதனால் உன்னை கட்டிலில் படுக்க வைத்தேன் என்றும் நான்சி தெரிவித்தார். பின்னர் சுனதாவை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து ரயிலில் அவரை ஏற்றி ஆதம்பாக்கத்திற்கு போகும்படி சுனதாவை அனுப்பிவிட்டார்.

தனக்கு அவசர வேலை இருப்பதாகவும், தன்னால் தற்போது உனது வீட்டிற்கு வர முடியாது என்றும், இன்னொரு நாள் வருகிறேன் என்றும் சுனதாவிடம் நான்சி கூறினாராம். கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி பறிபோனது தெரியாமல் சுனதா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு போய் பார்த்த பிறகுதான் கழுத்தில் கிடந்த தனது தங்க சங்கிலியை காணாததை கண்டு சுனதா அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசில் சுனதா புகார் அளித்தார். சைதாப்பேட்டை போலீசார் 2-வது முறையாக மயக்க மருந்து மோகினி நான்சியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சுனதாவிடம் பறித்த தங்க சங்கிலியை உருக்கி அதை தங்க கட்டியாக மாற்றிய நான்சி வியாசர்பாடியில் உள்ள அடகு கடையில் அதை அடமானம் வைத்து பணம் வாங்கியிருக்கிறார். போலீசார் அந்த தங்க கட்டியை மீட்டார்கள்.

இதேபோல் சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் டெய்லர் தொழில் செய்யும் சுஜாதா என்ற பெண் தனியாக இருந்தார். அவரிடம் நைசாக பேசி, மயக்க மருந்து கலந்த பால்கோவா கொடுத்து 5 பவுன் நகையை ரவணம்மா என்ற பெண் பறித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னை அயனாவரத்தில் பாயாசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் ஒருவரிடம் நகை பறித்ததாக தாயும், மகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி சென்னையில் மயக்க மருந்து மோகினிகளின் இந்த அட்டூழியம் தொடர்கதையாக இருககிறது. இதுவரை 4 பேர் கைதாகியுள்ளனர். மயக்க பிஸ்கட் மற்றும் பால்கோவா, பாயாசம் கொடுத்து நகைகளை பறிக்கும் கும்பல்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+