சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு இதெல்லாம் ஜுஜுபி.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.. போலீஸ்அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள சாதாரண முக கவசங்கள் பயன் தராது என்பதை ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்து புரிய வைத்திருக்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள சாதாரண முக கவசங்கள் பயன் தராது என ஒரு பெண்ணின் புகைப்படம் புரிய வைத்துள்ளது. அதே புகைப்படம் சைபர் பாதுகாப்பு பற்றியும் பேசுவது தான் ஆச்சரியம்.

Recommended Video

    N95 mask கொரோனா வைரஸை தடுப்பதில்லை - மத்திய அரசு

    உலகமே இன்று கொரோனாவின் கோரப்பிடிப்பில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனாவை அழிக்க சரியான மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நம்மை நாம் தான் தற்காத்து கொள்ள வேண்டும் என்ற சூழலே நிலவுகிறது.

    அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவது, மற்றவர்களுடன் பேசும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது உள்ளிட்டவைகளை செய்வதன் மூலம் கொரோனாவில் இருந்து நம்மை ஓரளவுக்கு தற்காத்து கொள்ளலாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இவற்றை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் பாய்ந்து வருகின்றன.

    ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதி - தொடர்பில் இருந்தவர்கள் கிலி ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதி - தொடர்பில் இருந்தவர்கள் கிலி

    தரமான மாஸ்க்-ஆ?

    தரமான மாஸ்க்-ஆ?

    ஆனால் இந்த வழிகாட்டுதல்களில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை தரமான மாஸ்க் அணிவது தான். கொரோனா வைரஸ் கிருமி மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் நுழையாமல் தடுக்கவே முக கவசம் அணியச் சொல்கிறார்கள். அதற்கு என்95 போன்ற தரமான மாஸ்க்குகள் தான் பக்கபலமாக இருக்கும்.

    பொருளாதார பிரச்சினை

    பொருளாதார பிரச்சினை

    ஆனால் இன்றைய பொருளாதார சூழலில் அதிக விலை கொடுத்து என்95 போன்ற மாஸ்க்குகளை வாங்குவது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சிரமமாக இருக்கிறது. எனவே லேசான துணியால் செய்யப்பட்ட, விலைக் குறைந்த மாஸ்க்குகளை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

    தவறான எண்ணம்

    தவறான எண்ணம்

    அது தவறு என்பதை ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்து புரிய வைத்திருக்கிறார் காவல்துறை அதிகாரி பங்கஜ் நயன் என்பவர். அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் நெட் துணியிலான மாஸ்க் அணிந்திருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து, "பலவீனமான கடவுச்சொல்லும், பயனர் பெயரும் வைத்தால் இப்படி தான் உங்கள் பாதுகாப்பு இருக்கும்", என குறிப்பிட்டுள்ளார்.

    ஒரே கல்லின் ரெண்டு மாங்காய்

    ஒரே கல்லின் ரெண்டு மாங்காய்

    அவர் தனது இந்த பதிவின் மூலம் சைபர் பாதுகாப்பையும், கொரோனாவில் இருந்த நம்மை தற்காத்துக் கொள்ள தரமான முக கவசம் அணிவதன் அவசியத்தையும் ஒருசேர உணர்த்தி இருக்கிறார். காவல்துறை அதிகாரியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. சமூக உணர்வோடு பதிவு வெளியிட்டுள்ள அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

    English summary
    IPS officer Pankaj Nain shared a photograph of a woman wearing a net face mask and captioned,"A weak password and username is going to give you such protection only".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X