Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலிகள் இனி காலி..பீலா விட்டு சுத்தினால் கம்பி தான் எண்ணனும்! சாட்டையை சுழற்றும் போலீஸ்..இதுக்காகவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போலீஸ், ஊடகம், வழக்கறிஞர், ஆர்மி என ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்திருந்த நிலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் நேற்று முதல் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இதே போல வாகன சோதனை நடத்த காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் வழக்கமாக வாகன சோதனை நடத்துவது வழக்கம். குறிப்பாக குற்றவாளிகளை கைது செய்வதற்கும் அவர்களிடமிருந்து குற்ற செயல்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீட்பதற்கும் வாகன சோதனையானது பயன்படுகிறது.

Police plan to conduct raids across Tamil Nadu regarding pasting of violation stickers

அந்த வகையில் காவல்துறையினர் சோதனை நடக்கும் போது பலர் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், லாயர், ஆர்மி உள்ளிட்ட பல்வேறு தொழில் பெயர்களை ஸ்டிக்கர்களாக ஒட்டி வருகின்றனர். இதே போல தலைமைச் செயலகம் டிஎன்இபி உள்ளிட்ட ஸ்டிக்கருடன் உலா வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

போலி ஸ்டிக்கர்: இதனால் உரிய முறையில் சோதனை செய்ய இயலவில்லை என காவல்துறையினர் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் போலி பிரஸ் ஸ்டிக்கர்கள் மூலம் சிலர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பிரஸ் போலீஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டிய வாகனங்களை பயன்படுத்தியதும் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அது மட்டுமல்லாமல் போலி நிருபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததையடுத்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் சங்கங்களும் காவல்துறையினருக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

சுற்றறிக்கை: இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆலோசனையின் படி, சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத பிரஸ், வழக்கறிஞர், ஆர்மி உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது எனவும் மோட்டார் வாகன சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து தந்தார். மேலும் மே இரண்டாம் தேதி முதல் இது தொடர்பாக சோதனை நடத்தப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் ஊடகம் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் இது தொடர்பாக தமிழக அரசுக்கும் காவல்துறையினருக்கும் கோரிக்கை ஒன்றை விடுத்தனர்.

தீவிர வாகன தணிக்கை: அதில் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றுபவர்கள் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் அந்தந்த துறையில் பணியாற்றுபவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்ளலாம் என காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில் மே இரண்டாம் தேதியான நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அபராதம்: குறிப்பாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, இசிஆர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்ற நிலையில் விதியை மீறி நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிய 421 பேருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முதல் நாளில் மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். மேலும் நம்பர் பிளேட்டுகளில் சம்பந்தமில்லாமல் எழுதி இருந்த ஸ்டிக்கர்களை அழிக்க உத்தரவிட்டதோடு மேலும் இது போன்ற விதிமுறைகளில் ஈடுபட்டால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிந்தனர்

தமிழகம் முழுவதும் சோதனை: அதே நேரத்தில் அடையாள அட்டை வைத்திருந்த இவர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டியவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை போலீசாரின் இந்த நடவடிக்கையை பத்திரிக்கையாளர்கள் வழக்கறிஞர் சங்கங்கள் வரவேற்றுவதோடு பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழக முழுவதும் இதே பிரச்சனை இருப்பதால் இந்த சோதனையை தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் இந்த வாகன தணிக்கையை தீவிர படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் இதில் பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளதால் சார்பு ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே இந்த வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+