சென்னையில் அனுமதியின்றி பேரணி..அண்ணாமலை உள்பட 3,500 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
காவல்துறை அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை: ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து சென்னையில் காவல்துறை அனுமதியின்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழக பாஜக முன்வைத்து வருகிறது. அவ்வப்போது ஆளுநரை சந்தித்து புகார் மனுவும் அளித்து வருகிறார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.உண்ணாவிரதத்தின் நிறைவாக, மாலையில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் ஓமந்தூரார் எஸ்டேட் முதல் போர் நினைவுச்சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு பயமில்லை. சிசிடிவியில் முகத்தை கட்டிக்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். அதன் ஒருபகுதியாகத்தான் திமுக கவுன்சிலர் இக்கொலையை தைரியமாக செய்திருக்கிறார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறு கண்டனம் கூடதெரிவிக்கவில்லை. மெழுகுவர்த்தியை போல் திமுகவின் ஆட்சியும், விரைவில் உருக்குலைய தான் போகிறது என்று கூறினார்.

இந்த நிலையில், சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரு.நாகராஜன் தலைமையில் பேரணி நடந்தநிலையில் 3,500 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா












Click it and Unblock the Notifications