அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞானசேகரன் மட்டுமல்ல! ஆடி காரில் வந்தது யார்? எஃப்ஐஆரில் திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களின் வீடியோ காட்டி, இதை அப்படியே பல்கலைக்கழக டீனிடம் சொல்லி டிசி வாங்க வைப்பேன் என ஞானசேகரன் தன்னை மிரட்டியதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் கூறிய தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவி அளித்த வாக்குமூலம் என முதல் தகவல் அறிக்கையில் பதிவானதில் கூறியிருப்பதாவது: "நானும் என் நண்பனும் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தர வைப்பேன் என மிரட்டினான்.

anna university crime chennai

எனது செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான். நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை. தொடர்ந்து மிரட்டினான்.

என் ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் என கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான். அவன் தொப்பி அணிந்திருந்தான். எனக்கு முகம் அடையாளம் தெரியாது.

அவன் கருப்பு நிற டீசர்ட்டும் ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்திருந்தான். ஆடி காரில் வந்தான். என் நண்பனை அடித்து துன்புறுத்தி, என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தான். இவ்வாறு அந்த பெண் எஃப்ஐரில் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் சுவர் ஏறி குதித்துச் சென்றதாக சொல்லப்படும் நிலையில் ஆடி காரில் எப்படி வந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 23 ஆம் தேதி ஒரு கட்டடத்திற்கு பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த ஒருவர் அந்த நண்பரை மிரட்டி தாக்கி விட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கோட்டூபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார்.

அந்த மாணவி சொன்ன அங்க அடையாளகளை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகின.

அந்த மாணவியை மிகவும் கொடூரமாக மிருகத்தை விட கேவலமாக வேட்டையாடியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆடி கார் யாருடையது, அதில் இருந்த இன்னொருவர் யார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தினமும் கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி விற்கும் ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தினுள் வந்து அங்கு தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை மறைந்திருந்து வீடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டுவாராம்.

அவர்கள் வேண்டாம் எங்களை விட்டுவிடு என சொல்லும் போது "அப்படியென்றால் என் ஆசைக்கு இணங்கு" என கூறுவாராம். இணங்க மறுத்தால் அப்படியே சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் என்பாராம்.

இப்படியாக மிரட்டி மிரட்டி நிறைய பெண்களிடம் அத்துமீறிய ஞானசேகரன் அவர்களிடம் இருந்து பணத்தையும் பறித்துவிடுவாராம். இப்படி ஏற்கெனவே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறாராம். இவர் கைது செய்யப்பட்ட போது தப்பியோட முயன்ற நிலையில் கீழே விழுந்து இடது கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது.

வன்கொடுமை செய்த நபர் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த நிலையில் அவர் அணிந்திருந்த உடையை வைத்து போலீஸாரிடம் , பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியிருந்தார். மேலும் தான் அணிந்திருந்த ஆடையை ஞானசேகரன் ஒளித்து வைத்திருந்ததும் அதை அவருடைய தம்பி எடுத்து வந்து போலீஸில் காட்டினாராம். அந்த ஆடையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வீடியோ காலில் காட்டிய நிலையில் அவர் அதே ஆடைதான் என்ற சொல்லியதை அடுத்து ஞானசேகரனை போலீஸார் கைது செய்தார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+