சென்னை கூவம் ஆற்றில் பாலத்தில் ஏறி குதித்த இளைஞர்.. பதறிப்போன சிந்தாதிரிப்பேட்டை
சென்னை: சென்னை சிந்தாரிப் பேட்டை கூவம் ஆற்றில் விழுந்த இளைஞரின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டைல் கூவம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் ஆழம் அதிகம் ஆகும். இங்கு சாக்கடைகள் சங்கமிப்பதால் கூவம் ஆற்றில் குளிக்கவோ மற்ற பிற தேவைகளுக்கே பயன்படுத்தவே முடியாது. இந்த கூவம் ஆற்றில் அடிக்கடி யாராவது தற்கொலை செய்யும் நோக்கில் விழுவது வாடிக்கையாக உள்ளது.

போலீசார் எத்தனை முறை அறிவுறுத்தினாலும் யாராவது ஒருவர் விழுவது தொடர்கதையாக உள்ளது. அப்படித்தான் ஜாகிர் என்பவர் விழுந்துள்ளார். சென்னை சிந்தாரிப் பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தான் ஜாகிர் என்ற குணா.
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த குணாவிற்கு கடந்த ஒரு வார காலமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை சிந்தாரிப்பேட்டை கூவம் கரையோரமாக அவர் சுற்றி திரிந்திருக்கிறார். பின்னர் திடீரென பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் கீழே குதித்தார். அவர் கூவத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி.
இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாரிப்பேட்டை போலீசாரும் எழும்பூர் தீயணைப்பு துறையினரும் ரப்பர் படகுகள் மூலம் குணாவின் உடலை தேடி வருகின்றனர்.
சென்னையில் நேற்று மழை அடிக்கடி குறுக்கிட்டது. இருள் சூழ்ந்தது. இதனால் தேடும் பணி இரவில் நிறுத்தப்பட்டது. இன்று காலையிலும் அவரை தேடும் பணி நடைபெற்றது.
சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நடத்திய விசாரணையில் சர்க்கரை நோய்க்கு குணா சிகிச்சை பெற்று வந்தவர். நேற்று காலையில் தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். வீடு திரும்பியவர் நேராக கூவம் ஆற்றில் குதித்துள்ளார். அதனை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை மாலை வரையிலும் குணாவின் உடல் கிடைக்கவில்லை.
தற்கொலை தடுப்பு எண்: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் வந்தால் அரசின் 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.












Click it and Unblock the Notifications