உளவுத்துறை தந்த ‛வார்னிங்’.. திருமாவளவனின் போலீஸ் பாதுகாப்பு திடீர் அதிகரிப்பு.. என்ன நடந்தது?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாளவனுக்கு திடீரென்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பின்னால் உளவுத்துறை கொடுத்த முக்கிய வார்னிங் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை என்பது மாறுபடும்.

தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் சமீபத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விஜயகாந்த் வீட்டுக்கு வழங்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு என்பது திரும்ப பெற்ப்பட்டத.
இத்தகைய சூழலில் தான் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு என்பது திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது திருமாவளவனுக்கு எப்போதும் பிஎஸ்ஓ எனும் தனி பாதுகாவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இன்னொரு பிஎஸ்ஓ மற்றும் ஒரு காவலர் என மொத்தம் 2 பேர் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளனர்.
இதனால் திருமாளவனின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை ஒன்றில் இருந்து 3 ஆக அதிகரித்துள்ளது. திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு அதிகரிக்க முக்கிய காரணம் என்பது உளவுத்துறை கொடுத்த முக்கிய எச்சரிக்கை தான் என கூறப்படுகிறது. அதாவது திருமாவளவனின் சமீபத்தில் பேச்சுக்களால் அவருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாலும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் உளவுத்துறை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தான் தமிழக அரசு சார்பில் திருமாவளவனுக்கு இந்த பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள அவரது வீட்டருகே மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அவருக்கு மிரட்டல் இருந்தும் தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தான் தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை புதிய அறிக்கைகளை அரசுக்கு வழங்கி உள்ள நிலையில் முதற்கட்டமாக திருமாளவனுக்கான போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தனக்கும், விசிக தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது திருமாவளவனுக்கு மட்டுமே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
தவெக அமைச்சரவையில் வெளியேறுவோம்.. திருமாவளவன் மீண்டும் ட்விஸ்ட்.. விஜய் ஷாக் -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்!











Click it and Unblock the Notifications