சின்ன குழந்தை சிறுநீர்.. ஆரம்பித்த பிரச்சினை.. காதலியிடமும் உரசல்.. இளைஞரை எரித்தே கொன்ற போலீஸ்காரர்
சென்னை: சென்னையைச் சேர்ந்த இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான காவலர் செந்தில் குமார் நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. 26 வயதாகும் இவர், ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1ம் தேதி ரவி தனியாக வீட்டிலிருந்த போது மூன்று பேர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாக கூறி, ரவியை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, கணவர் ரவி மாயமானதாக போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

மனைவி சந்தேகம்
இதுகுறித்த விசாரணையின் போது, வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலைய காவலரான செந்தில்குமார் என்பவர் அவரது காதலியுடன் வசித்து வந்ததாகவும், செந்தில்குமாருடன் இணைந்து கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே ரவியின் மகள், செந்தில்குமாரின் வீட்டின் முன் சிறுநீர் கழித்ததால், இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவியை செந்தில் குமார் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக போலீசாரிடம் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை
இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணையில் காவலர் செந்தில் குமார் விசேஷத்திற்கு செல்வதாக கூறி விடுப்பு கேட்டதும், கடந்த 28ஆம் தேதி முதல் பணிக்கு வராததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்தது தெரிய வந்தபின், போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்துள்ளனர். அப்போது செந்திகுமாரின் காதலி கவிதா என்பவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரித்துள்ளனர்.

சடலம் மீட்பு
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது ரவியின் உடல் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் காவலர் செந்தில் குமாரை போலீசார் தீவிரமாக தேடியுள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், செந்தில் குமாரின் காதலியான கவிதாவிடம், ரவி தகராறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக ரவியை கூட்டாளிகளுடன் இணைந்து காவலர் செந்தில் குமார் சாக்கில் வைத்து எரித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நெல்லை நீதிமன்றத்தில் சரண்
காவலர் செந்தில் குமாரின் செல்போன் எண்ணை போலீசார் ட்ராக் செய்து தேடிய போது, சென்னை ராமாபுரம் அருகே ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் கூட்டாளிகளுடன் தலைமறைவானது தெரிய வந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் காவலர் செந்தில் குமார் சரணடைந்துள்ளார். அவருடன் ஐசக் என்பவரும் சரணடைந்துள்ளார். முன்விரோதம் காரணமாக போலீசே, இளைஞரை எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications