சென்னை எண்ணூரில் பிரபல ரவுடியை காலில் சுட்டுப்பிடித்த காவல் துறையினர்.. அடுத்தடுத்து 3 சம்பவங்கள்
சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் பிரபல ரவுடியை காவல் துறையினர் காலில் சுட்டுப்பிடித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த விக்கி என்ற ரவுடியை தற்காப்புக்காக சுட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். உதவி காவல் ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பி செல்ல முயன்றதால் சுட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
சென்னை எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் உதவி ஆய்வாளர் நவீன் தலைமையிலான காவல்துறையனிர்ல விக்கியை பிடிக்க சென்றபோது அவர் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் தப்பி ஓட முயன்றதால் காலில் சுட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். ரவுடி விக்கி கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடி என்று சொல்கிறார்கள் காவல்துறை அவரை நீண்ட காலமாக அவரை தேடி வந்தது. தற்போது காலில் சுட்டு பிடித்துள்ளனர். இதையடுத்து ரவுடி விக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக நேற்று வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினுவை சென்னை சூளைமேட்டில் போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேட்டில் 2024ல் நடந்த வழிப்பறி வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததால் பினுவை நேற்று கைது சுற்றுபிடித்து கைது செய்தனர். ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவருடன் பங்கேற்ற 75 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தார்கள்.
சென்னை சூளைமேட்டில் ரவுடியாக வலம் வந்த பினு, வடபழனி போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்த அவர், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடித் தேடி அலைந்த சென்னை போலீஸ், ஒருகட்டத்தில் பினுவை கண்டுபிடிக்க முடியாத நிலைஇருந்துள்ளது . 2014-ம் ஆண்டுக்குப்பிறகு பினு, பெரியளவில் குற்றச்செயல்களில் ஈடுபடதாக தெரியவராத நிலையில்,போலீசார் தேடியபடியே இருந்தனனர். ஆனால் தமிழகத்தைக் காலிசெய்துவிட்டு சொந்த மாநிலமான கேரளாவில் பினு, தலைமறைவாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை மாங்காடு பகுதியில் உள்ள லாரி ஷெட்டில் கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது வீடியோ வெளியான நிலையில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 29-வது பிளாக்கை சேர்ந்தவர் சத்யா (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எண்ணூர் காவல் நிலையத்தில் பி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாக சத்யா உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் விஜய் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 8 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் சத்யாவை பின்தொடர்ந்து விரட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க சத்யா திருச்சிணாங்குப்பம் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் நுழைந்தார். விடாமல் துரத்திய அந்த மர்ம கும்பல், சத்யாவை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதில் சத்யா உயிரிழந்தார். சென்னையில் அடுத்தடுத்து இரண்டு நாளில் இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் ஒரு ரவுடி மற்றொரு ரவுடி கும்பலால் கொல்லப்பட்டுள்ளார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications