இரவில் கடற்கரை, பூங்காவில் பொதுமக்களை போலீசார் விரட்டக் கூடாது என மனு.. ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவு
சென்னை: இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை போலீசார் விரட்டக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடற்கரை, பூங்கா போன்றவற்றில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலே பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி கொடுப்பது இல்லை. பொதுமக்களின் நலன் கருதியும் சமூக விரோத செயல்கள் நடக்காமல் தடுப்பதை உறுதி செய்யவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்தான், இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களில் இருந்து பொதுமக்களை போலீசார் விரட்டுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் 2024 எப்படி இருக்க வேண்டும்?! நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு
இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக உளவியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மாநகராட்சி சார்பில் பல்வேறு சிக்னகளில் பசுமை நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இது போல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மாலை நேரங்களிலும் பொதுமக்கள் கடற்கரைகள், மற்றும் பூங்காக்களுக்கு சென்று வருகிறார்கள். அதேவேளையில் இரவு 9 மணிக்கு மேல் பூங்காக்கள், கடற்கரைகளில் இருக்க கூடாது என பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்துகிறார்கள். எனவே அவர்களுக்கு கூடுதலாக அதிக நேரம் கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் மக்கள் இருப்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், பிபி பாலாஜி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு சென்னை மாநகர காவல்துறையினருக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications