சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது.. போலீசாருக்கு பறந்த உத்தரவு.. மேட்டர் இதுதான்!
சென்னை: சிவில் பிரச்சினைகளில் தேவையின்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.
நிலம், வீடு, வாடகை உள்ளிட்ட சிவில் பிரச்னைகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியுள்ளது. எனினும், காவல்துறையினர் விசாரிப்பதில் மட்டுமே தீர்வு கிடைக்கும் என நம்பும் மக்கள் சிவில் பிரச்சினைகளுக்கும் போலீசாரை அணுகும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரத்தில் காவல்துறையினரும் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

சில நேரங்களில் சட்டத்தை மீறியும் இத்தகைய சிவில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. சிவில் தொடர்பான பிரச்சனைகள் பேசி பார்த்தும் முடியாத புகார்களை, நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறி காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். எனினும், சிவில் பிரச்சினைகள் போலீசாரிடம் செல்வது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், சிவில் பிரச்சினைகளில் அவசியம் இன்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஏடிஜிபி அருண் கூறியதாவது:- எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது.
பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும். சிவில் விவகாரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்"என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications