"இதுதான் முக்கியம்.. கவனமாக இருங்க".. வந்த முதல் நாளே கிளாஸ் எடுத்த டிஜிபி சைலேந்திர பாபு.. சிக்ஸர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பதவி ஏற்ற நிலையில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் சட்ட ஒழுங்கை பாதிக்காக முக்கியத்துவம் கொடுப்பேன் என்று பேட்டி அளித்துள்ளார். இதில் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    DGP ஆனதும் Sylendra Babu போட்ட முதல் Condition! | Oneindia Tamil

    தமிழக காவல்துறையின் 30-வது டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் இன்று பதவி ஏற்றார். மிகவும் நேர்மையான அதிகாரி, மக்களுக்கு நெருக்கமானவர், கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்த சைலேந்திர பாபு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2019 வருடம் ஜூன் மாதம் ஜே.கே திரிபாதி நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் இன்றோடு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    பேட்டி

    பேட்டி

    இந்த நிலையில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பதவி ஏற்ற நிலையில் சைலேந்திர பாபு முக்கியமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிக முக்கியமான வாய்ப்பு.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இப்படி ஒரு வாய்ப்பை நான் கண்டிப்பாக சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன். என்னுடைய பணியை சிறப்பாக செய்வேன். தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்குதான் முக்கியம்.

    பணிகள்

    பணிகள்

    அதற்கான பணிகளை கண்டிப்பாக மேற்கொள்வேன். போலீசார் மக்களிடம் பொறுப்புணர்வுடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும். மனிதாபிமானத்தோடு போலீசார் செயல்பட வேண்டும். மக்களிடம் போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று, சைலேந்திர பாபு டிஜிபி தெரிவித்துள்ளார்.

    போலீஸ்

    போலீஸ்

    சில நாட்களுக்கு முன் போலீஸ் தாக்கியதால் சேலத்தில் முருகேசன் என்ற வியாபாரி இன்று பலியானார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து சரியாக ஒருவருடம் முடிந்த நிலையில், நடைபெற்றுள்ள இன்னொரு கோர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மக்கள் தாக்குதல்

    மக்கள் தாக்குதல்

    போலீசார் இப்படி மக்களை தாக்குவதும், லத்தியால் மோசமாக அடிப்பதும் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில்தான் போலீசார் மக்களிடம் கனிவாக நடக்க வேண்டும் என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் இனி போலீசார் மக்களை அணுகும் விதம் மாற்றம் அடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+