ஓராண்டு கள்ளக்காதல்.. 15 வயது சிறுமி மீதும் காமப்பார்வை.. துப்பாக்கி முனையில் தொல்லை.. எஸ்ஐ கைது
சென்னை: சென்னையில் 15 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்பு பணிக்காக சென்ற எஸ்ஐ சதீஷ்குமாருக்கும், அதே பகுதியில் உள்ள அருள்நகர் நியாயவிலைக் கடையில் பணிபுரிந்து வந்த பெண்ணிற்கு தகாத பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கள்ளக்காதலர்களாக மாறி கடந்த ஓராண்டாக தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வருகிறார்கள். ஒரு நாள் வழக்கம் போல் மணலி பகுதியில் அந்த பெண்ணின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்த போது வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் 15 வயது சிறுமி இந்த அசிங்கத்தை பார்த்துள்ளார்.

அச்சம்
உடனே தனது அப்பாவிடம் இதை சொல்ல போவதாக தெரிவித்தார். இதனால் அச்சமடைந்த எஸ் ஐ சதீஷ்குமார், "உன் அப்பாவிடம் இதை கூறினால் நீயும் உன் தம்பியும் உயிரோடு இருக்க மாட்டீர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விஷயத்தை அந்த சிறுமி தனது தந்தையிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.

எஸ்ஐ
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எஸ்ஐ தினந்தோறும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த 15 வயது சிறுமி மீது சதீஷ்குமாருக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதாக கூறி தனது ஆசையை சிறுமியின் தாயிடம் கூறினார்.

வேலி
பணத்திற்கு ஆசைப்பட்டு வேலியாக இருக்க வேண்டிய தாயே சதீஷ்குமாரின் ஆசையை பூர்த்தி செய்ய தான் தடையாக இருக்க மாட்டேன் என கூறிவிட்டார். இந்த நிலையில் சிறுமியை சம்மதிக்க வைக்க அவரது பிறந்தநாளன்று கேக் வாங்கி வந்து கொடுத்துள்ளார். இதை சிறுமியின் தந்தை கண்டித்துள்ளார்.

சிறுமியின் தந்தை
பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து சிறுமியின் தந்தை மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை












Click it and Unblock the Notifications