கருத்து சுதந்திரம் சரி.. அதுக்காக இவ்ளோ கேவலமாகவா?.. இனியாவது ட்விட்டர் சுத்தமாகுமா?
சென்னை: டிவிட்டர் பயன்படுத்துவோர் அதில் பதிவிடப்படும் அநாகரிகமான கருத்துகளால் வெளியேறி வரும் நிலையில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறாக பேசுவோர் நாகரீகமாக கருத்துகளை பதிவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்டவைகளுக்கென தனித்தனி ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு. இவர்கள் எப்போதும் தான் விரும்பும் பிரமுகரை ஆஹா ஓஹோ என பாராட்டி வருவர்.
ஆனால் மற்றவர்கள் விரும்பும் தலைவர்களை மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். தற்போது நவீன காலத்தில் சோஷியல் மீடியா எனும் சமூகவலைதளங்களை பயன்படுத்துவோர் அதிகரித்து விட்டனர்.

அரசியல்
ட்விட்டர் எனும் சமூகவலைதளங்களில் அரசியல், சினிமா, விளையாட்டு, ஊடகம் என அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர். இதில் அரசியல் என வைத்துக் கொண்டால் ஒரு கட்சியின் தலைவர் குறித்து இன்னொரு கட்சியின் தொண்டர் மிகவும் கேவலமாக விமர்சிக்கிறார்கள்.

டிவிட்டர்
அதிலும் ஒருமையில் பேசுவது என்பது போய் டிவிட்டரை திறந்தாலே நாராசம் என்ற அளவுக்கு இவர்களின் பேச்சு உள்ளது. அது போல் ஒரு சினிமா பிரபலம் என எடுத்துக் கொண்டால் ஒரு நடிகர், நடிகையின் ரசிகர், இன்னொரு நடிகர், நடிகையை கண்டபடி பேசுகிறார்கள்.

ஒற்றுமை
ஆனால் இவர்கள் சண்டையிட்டு கொள்ளும் நடிகர், நடிகைகள் ஒற்றுமையாகவே உள்ளனர். சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள். எனினும் கேட்பதில்லை. விமர்சனங்களையே முன்வைத்தாலும் அதை மரியாதையுடன் நாகரீகத்துடனேயே அரசியல்வாதிகள் வைக்கிறார்கள். ஆனால் இந்த தொண்டர்கள் மட்டும் ஏனோ இப்படி அவதூறு கருத்துகளை பதிவிடுகிறார்கள்!

இழிவு
கருத்து சுதந்திரம் இருக்க வேண்டியதுதான். ஆனால் அவை ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். நமது கருத்து யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. மறைந்த தலைவர்களையும் விடாமல் இழிவாக சித்தரித்தும் பேசியும் வருகிறார்கள்.

மரியாதையே இல்லை
இதுபோல் மரியாதை இல்லாமல் பேசும் தொண்டரை சொந்த கட்சியும் கண்டிப்பதில்லை. இது போன்ற செயல்களால் டிவிட்டரை விட்டு பலர் வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களைப் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுத்தமாக்க
எனவே மீண்டும் டிவிட்டர் தளத்தை சுத்தமாக்க தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கை உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்கள் விமர்சிக்கும் தலைவர் மற்றொரு தொண்டனுக்கு தலைவர் என்பதை மறந்து இது போல் கேவலமாக பேசும் போக்கு மாறி டிவிட்டர் சுத்தமாகுமா? கருத்துக்களைப் பதிவிடுவோரும் நாகரீக பாதைக்குத் திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications