பப்ஜி விளையாடாதீங்க.. மீறினால் பெற்றோர்களுக்கு தகவல்.. மதன் இன்ஸ்டாவிலிருந்து போலீஸ் வார்னிங்
சென்னை: பப்ஜி விளையாட வேண்டாம், மீறினால் பெற்றோரிடம் தெரிவிக்கப்படும் என மதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Recommended Video
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் மூலம் விளையாடி வந்தவர் யூடியூபர் மதன். அப்போது பெண்கள், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியும் அந்தரங்க உறுப்புகள் குறித்து பேசியும் வந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து போலீஸார் தருமபுரியில் பதுங்கியிருந்த மதனையும் அவரது மனைவி கிருத்திகாவையும் கைது செய்தனர். அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ 4 கோடி முடக்கப்பட்டது.

மதனின் யூடியூப் சேனல்
போலீஸார் மதனின் யூடியூப் சேனல்களை முடக்கினர். அவரது வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டனர். இந்த நிலையில் போலீஸார் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று பப்ஜி விளையாடுவதை நிறுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

பப்ஜி
மீறி விளையாடினால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். அது போல் பப்ஜியில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. மீறி செய்தால் உங்கள் முகவரிக்கு கடிதம் எழுதுவோம். நீங்கள் எல்லாரும் கண்காணிக்கப்படுகிறீர்கள், எனவே எச்சரிக்கையாக இருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பப்ஜி விளையாட்டு
இதற்கு சிலர் நாங்கள் பப்ஜி விளையாட்டை டெலிட் செய்துவிட்டோம் என ரிப்ளை கொடுத்துள்ளார்கள். இன்னும் சிலர் ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் விளையாடலாம் என்ற டைம் லிமிட்டாவது கொடுங்கள் சார் என போலீஸாருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்கள்.

பப்ஜி கேம்
அதற்கு போலீஸாரும், நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை நாங்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். மதன் சிறையில் இருக்கிறார். இந்தியாவில் பப்ஜி விளையாடுவது குற்றச்செயல். உங்கள் அனைவரின் இன்ஸ்டா கணக்குகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications