சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் சிக்கல்! ராஜசேகரன் அக்யூஸ்ட் ஆனதுக்கு காரணமே போலீஸ்தான்! புகார் சொல்லும் உறவினர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்த நிலையில், ராஜசேகரன் குற்றவாளியானதற்கு காவல் துறையே காரணம் என்று அவரது அண்ணன் மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

Recommended Video

    ராஜசேகரன் அக்யூஸ்ட் ஆனதுக்கு காரணமே போலீஸ்தான்! புகார் சொல்லும் உறவினர்கள்!

    கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்த நிலையில் மேஜிஸ்ட்ரேட் லட்சுமி தலைமையில் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம் 6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம்

    இதனைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு நீதிபதி குழுவினர் வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கைதி உயிரிழப்பு

    கைதி உயிரிழப்பு

    இந்நிலையில் நீதிபதி குழுவினர் தற்போது மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ராஜசேகர் உறவினர்களும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர். சட்டம் சார்ந்த தடயவியல் துறையில் நீதிபதி குழவினர் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் . பின்னர் அமரர் அறையில் வைக்கப்பட்ட ராஜசேகரின் உடலை அவரது தாய் மற்றும் சகோதர சகோதரிகள் முன்பு நீதிபதி தலைமையில் அமரர் அறையின் உள்ளே சென்று காட்டப்பட்டது

    உடற்கூறு ஆய்வு தொடங்கியது

    உடற்கூறு ஆய்வு தொடங்கியது

    பின்னர் நீதிபதியின் குழுவினர் விசாரணைக்கு பின்னர் மீண்டும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தப்பட்டு உடற்கூறு ஆய்வு தொடங்கியது. ராஜசேகரின் அண்ணன் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில்," தனது தம்பி எட்டு வயது முதல் காவல்துறையினரிடம் தொடர்பில் இருந்து வருவதாகவும் அவ்வப்போது காவல்துறையினருக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொடர்பில் இருந்து வரும் நிலையில் காவல்துறையினர் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் ராஜசேகர் செய்துவந்தார்.

    உறவினர்கள் புகார்

    உறவினர்கள் புகார்

    இந்நிலையில் காவல்துறை முதல் சிறைச்சாலை வரை அனைவரிடமும் தொடர்பில் இருந்ததாகவும் ஏற்கனவே தனது தம்பி தன்னிடம் கூறியுள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் தனது தம்பி அப்பு என்ற ராஜசேகரை அழைத்தற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் எனது தம்பியை காவலர்கள் கைது செய்த விவரத்தை இதுவரையிலும் தங்களது குடும்பத்தினருடன் தெரிவிக்கவில்லை

    மிகப்பெரிய சம்பவம்

    மிகப்பெரிய சம்பவம்

    காவலர்களுக்கும் தனது தம்பிக்கும் இடையே மிகப்பெரிய சம்பவம் ஏதோ ஒன்று நடைபெற்று இருக்கலாம் என்றும் அதன் காரணமாகவே காவல்துறையினர் தனது தம்பியை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டினர்.மேலும் வெள்ளிக்கிழமை அன்று அப்பு என்ற கலையரசன் இருவரையும் சேர்ந்து காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும் கலையரசன் ராஜசேகரை காவல்துறைக்கு அழைத்துச் சென்றதாகவும் இந்நிலையில் கலையரசனை விசாரித்தால் முழு விவரமும் தெரியவரும் என்றும் குற்றம் சாட்டுகிறார்.

    English summary
    His brother Manikandan has made a sensational allegation that the police were responsible for Rajasekara's guilt in the death of Rajasekar, a prisoner under investigation at the Kodungaiyur police station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X