லியோ வெற்றி விழா: தயாரிப்பு நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை கேட்டு காவல் துறை கடிதம்
சென்னை: லியோ வெற்றி விழா குறித்து பல்வேறு கேள்விகளை தயாரிப்பு நிறுவனத்திற்கு காவல் துறை கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்ததும் வெற்றி விழாவுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டே இருந்தது.

அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதாக இருந்தது. ஆனால் அது திடீரென ரத்தாகிவிட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் வேறு ஒரு வழக்கில் காவல் துறை கூறிய போது லியோ இசை வெளியீட்டு விழாவை படதயாரிப்பு நிறுவனம்தான் ரத்து செய்தது என விளக்கமளித்தனர்.
இதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருந்ததால் பலரது கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் படம் வெளியான போது பலருக்கு டிக்கெட் கிடைப்பதில் குளறுபடி இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு அது சரியாகவிட்டது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இரு மாதிரியான விமர்சனங்கள் வருகின்றன.
குறிப்பாக இந்த படத்தை வைத்து ரஜினி ரசிகர்கள் விவாதமே நடத்தி வருகிறார்கள். மேலும் லியோ திரையிடப்பட்ட சிலநாட்களிலேயே ரூ 1000 கோடி வசூல் என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். பல்வேறு திரையரங்குகளில் புக் ஆகாமல் இருந்து வரும் நிலையில் எப்படி ரூ 1000 கோடி வசூலாகும் என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் லலித்குமார் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி லியோ திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் ரூ 461 கோடி வசூலை குவித்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதை ரஜினி ரசிகர்கள் டிரென்ட்டாகினர். லியோ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று நேற்று வெளியானது. லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்த கடிதத்திற்கு காவல் துறை பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன, காவல் துறை பாதுகாப்பு இல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? முக்கிய விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள்? விழாவுக்கு 5000 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என காவல் துறை கேள்விகளை எழுப்பி சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்ததும் தயாரிப்பு நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு காவல் துறையின் அனுமதி கிடைக்கும் என தெரிகிறது.
-
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications