38 வயது வைரமுத்து.. தேனாம்பேட்டையில் வீடு.. திடீரென தூக்கில் தொங்கினார்.. காரணம் என்ன தெரியுமா?
சென்னையில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: வைரமுத்துவுக்கு ஏன் இவ்வளவு கோபம் வந்தது என்று தெரியவில்லை.. இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி செய்துட்டாரே என்று தேனாம்பேட்டை குடியிருப்புவாசிகள் புலம்புகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் வைரமுத்து.. 38 வயதாகிறது.. சைதாப்பேட்டை ஸ்டேஷனில் போலீசாக உள்ளார்.. தேனாம்பேட்டை போலீஸ் குவார்ட்டஸிலேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார். மனைவி பெயர் அமலா புஷ்பம். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் வைரமுத்துவுக்கும், அமலா புஷ்பத்துக்கும் தகராறு வந்திருக்கிறது.. சில நாட்களாகவே தம்பதிக்குள் இந்த தகராறுதான் வந்துள்ளது.. ஆளுக்கொரு பேரை சொல்லி, அந்த பேரைதான் குழந்தைக்கு வைப்பது என்று உறுதியாக இருந்தனர்.
இநிலையில், நேற்று முன்தினம் நைட் டியூட்டி முடித்துவிட்டு, வைரமுத்து வீட்டுக்கு வந்தார்.. நேராக போய் தன் ரூம் கதவை பூட்டிக்கொண்டார்.. ரொம்ப நேரமாகியும் ரூம் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்கள், கதவை தட்டினர். ஆனாலும் கதவை திறக்கவில்லை... அதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு வைரமுத்து, தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய வைரமுத்து உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தும் விசாரித்து வருகின்றனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications