கெத்தாக பைக்கில் வந்து இறங்கிய போலீஸ்காரர்.. சுற்றி ஒரு லுக்.. கடைசியில் அட கொடுமையே!

மார்க்கெட் பகுதியில் போலீஸ்காரர் பேக் ஒன்றினை திருடி சென்றுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கெத்தாக பைக்கில் வந்து ஹேண்ட் பேக்கை திருடிய ஆசாமி -வீடியோ

    சென்னை: அந்த போலீஸ்காரர் கெத்தாக பைக்கில் வந்து இறங்கினார்.. சுற்றிலும் ஒரு லுக் விட்டார்.. கடைசியில் இப்படி ஒரு கேவலமான வேலையை செஞ்சிட்டு, தன் பைக்கை எடுத்துட்டு கிளம்பிட்டார்!

    சென்னை எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதி ரொம்ப ஃபேமஸானது. எப்பவுமே பரபரப்பாக இருக்கும். சுற்றுப்புற பகுதி மக்கள் இங்குதான் காய்கறி முதல் எல்லா பொருட்களையுமே வாங்க வருவார்கள்.

    policemans action lands him in trouble

    இதனால் கடைகளுக்கு உள்ளே மட்டுமில்லாமல், வெளியேவும்கூட நிறைய பொருட்களை விற்பனைக்காக குவித்து வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இங்குள்ள கடைகளில் சிசிடிவி காமரா பொருத்தப்பட்டு இருக்கும்.

    இங்கு ஆஷிக் என்பவர் பேன்சி கடை வைத்திருக்கிறார். எதேச்சையாக தனது சிசிவிடி காமிராவை ஆய்வு செய்தார். அதில் கடந்த 19-ம்தேதி கடைக்கு வந்த ஒருவர் லேடீஸ் ஹேண்ட் பேக்கை திருடுவது கண்டு ஷாக் ஆனார். பைக்கில் இருந்து இறங்கி வரும் அந்த நபர் டிப்-டாப்பாகத்தான் இருக்கிறார்.

    கடைக்கு வெளியே சுற்றிலும் ஒரு நோட்டம் விடுகிறார். பிறகு டபால் என ஒரு ஹேண்ட் பேக் எடுக்கிறார். எடுத்துக் கொண்டு போய் தன் பைக்கில் வைத்துவிட்டார். இதை பார்த்து அதிர்ந்த கடைக்காரர், இவ்வளவு தைரியமாக திருடுவது யார் என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் ஒரு போலீஸ்காரர் என்பதும் பெயர் வினோத் என்பதும்!

    உடனடியாக போலீஸ் பேக் திருடியதை கடைக்காரர் எம்ஜிஆர் நகர் ஸ்டேஷனில் போய் புகார் சொன்னார், அதுவும் இல்லாமல், இப்படி திருடிய வீடியோவும் இணையத்தில் ஒரு பக்கம் வைரலாக ஆரம்பித்துவிட்டது. பிரச்சனை விஸ்வரூபம் ஆனதையடுத்து, சம்பந்தப்பட்ட வினோத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+