ஜனவரி 16-ம் தேதிக்கு பதிலாக... ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்..!
சென்னை: ஜனவரி 16-ம் தேதிக்கு பதில் ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

ஜனவரி 16-ம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக இந்தாண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத வகையில் இந்தாண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க நேரிட்டதாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜனவரி 31-ம் தேதி ஞயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்குமாறு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை யாரும் அஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தேசிய நோய் தடுப்பு தினமாக கருத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் மூலம் மக்கள் பயனடைந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார். இதேபோல் மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.
இதனிடையே நாளை மறுதினம் சனிக்கிழமை சுகாதாரத்துறை முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடுமுழுவதும் தொடங்கவிருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைந்தது ஓராண்டுக்கு அல்லது அதற்கு மேலும் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications