எடப்பாடி கையைவிட்டு நழுவும் முக்குலத்தோர் வாக்கு.. 2024ல் எத்தனை இடம்? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு
சென்னை: எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தென் மாநிலங்களில் இக்கட்சியின் வாக்கு வங்கி எந்த அளவுக்கு இருக்கும்? என்பது குறித்து ஒன்இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு அரசியல் விமர்சகர்கள் பேட்டிளித்துள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக போராடி வருகிறார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மாநாடு, சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் என எல்லாவற்றிற்கும் பின்னணியில் தென் மாநில வாக்கு வங்கிதான் இருக்கிறது.

இந்நிலையில் அடுத்தகட்ட முயற்சியாக அவர் வரும் 30ம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கிறார். ஏற்கெனவே 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை பிரித்து கொடுத்ததால் எடப்பாடி முக்குலத்தோர் சமூதாயம் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல டிடிவி தினகரன், சசிகலாவை ஓரங்கட்டியதிலும் இந்த அதிருப்தி நீடிக்கிறது. இவையெல்லாம் சேர்த்து முக்குலத்தோர் வாக்கு வங்கியை கையைவிட்டு நழுவ செய்ய வாய்ப்பிருக்கிறது.
தென் மாவட்டங்களை பொறுத்த அளவில் மொத்தம் 35 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் திமுக கடந்த முறை 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் டிடிவி தினகரன் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். குறிப்பாக ராமநாதபுரம் சிவகங்கை தொகுதிகளில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கி இருக்கிறார். தற்போது ஓபிஎஸ்ஸும் வெளியே இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற தேர்தல் என்பது நிச்சயம் டஃப் கொடுக்கும்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தென் மண்டலத்தில் எத்தனை இடம் கிடைக்கும் என்பது குறித்து ஒன்இந்தியா யூடியூப் சேனல் சார்பில் ரவுண்ட் டேபிள் அரசியல் விவாதம் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் லட்சுமி, அரசியல் விமர்சகர்கள் ரவீந்திரன் துரைசாமி, கலை மற்றும் அக்னீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அதில், "தென்மாவட்டங்களில் எத்தனை தொகுதிகளில் அதிமுக முதல் இரண்டு இடங்களை பெறாது?" என்று நெறியாளர் நெல்சன் சேவியர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் லட்சுமி பேசியதாவது, "இது ஒரு சிக்கலான கேள்வி. இதற்கு உடனடியாக பதில் சொல்லி விட முடியாது. ஏனெனில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்துதான் பாஜக என்ன செய்யப் போகிறது என்று தெரியும். அதேபோல தமிழ்நாட்டில் இதுவரை பாஜகவை எதிர்த்து அதிமுக பேசவில்லை. தேர்தலில் மக்களின் நம்பிக்கை பெற வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் இப்போதும் கூட்டணியில்லை, எப்போதும் கூட்டணி இல்லை என்று கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததும் தேர்தலுக்காகதான். பாஜகவை மட்டுமல்ல தமிழகத்தில் ஆளுநரையும் இதுவரைக்கும் அதிமுக எதிர்த்து பேசவில்லை. அதாவது அதிமுக எல்லா ஆப்ஷனையும் திறந்துதான் வைத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் கூறுகையில், "தென் மாவட்டங்களில் ஐந்து தொகுதிகளிலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். சட்டமன்றத் தேர்தல் கணக்கீட்டின்படி பாஜகவை விட அதிமுக கூடுதலாக வாக்குகளை வாங்கியது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கின்படி பார்த்தால் அதிமுக நிச்சயமாக ஐந்து தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். 70 சதவீத எதிர்ப்பு இருந்த மோடிக்கு தற்போது ஆதரவு ஓட்டுகள் தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது என்பது என்னுடைய கருத்து" என்று கூறியிருந்தார்.
அதேபோல அரசியல் விமர்சகர் அக்னிஸ்வரன் கூறுகையில், "தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் அதிமுக முதல் இரண்டு இடங்களை பெறாது என்று நினைக்கக்கூடிய தொகுதிகள் எத்தனை என்கிற கேள்வியே தவறானது. அப்படி எந்த வாய்ப்பும் கிடையாது. அரசியல் விமர்சகர் ரவீந்திரன் சொன்னதில் நான் முற்றிலும் மாறுபடுகிறேன். தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பை வைத்துக் கொண்டே தொடர்ந்து நாங்கள் வெற்றியை பெறுவோம் திமுக சொல்லிக்கொண்டிருந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகல் என்பது சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா இறந்து விட்டதால் அதிமுகவின் ஓட்டுகளை தன் பக்கம் திருப்பிக் கொள்ளலாம் என்று கணக்கீடு பாஜகவினர் செய்திருந்தார்கள். எடப்பாடி பழனிசாமியை தன் பக்கம் இழுத்து வந்து அதன் மூலம் வாக்கு வங்கியை கைப்பற்றி விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்று தற்போது எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டார். இப்பொழுது எந்த திட்டமும் கை கொடுக்காததால் எடப்பாடி பழனிசாமி தவிர்த்து ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரோடு கைகோர்க்க பாஜக முயன்று வருகிறது. இதையெல்லாம் கடந்து அதிமுக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்பது என்னுடைய பார்வை" எனக் கூறியுள்ளார்.
இறுதியாக அரசியல் விமர்சகர் கலை பேசுகையில், "கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் அல்லது பாஜக கைப்பற்றும். மூன்றாவது இடத்தில் அதிமுக இருக்கும். எனவே டெபாசிட் இழப்பதற்கு வாய்ப்பில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக பலமாக இருக்கிறது. கடந்த முறை பாஜக சார்பில் நின்று ஜெயித்த நயினார் நாகேந்திரன் அதிமுகவின் சப்போர்ட்டில்தான் ஜெயித்தார். தமிழிசை அதிகமான அளவில் வாக்கு பெற்றிருந்தும் அதிமுகவின் சப்போர்ட்டில் தான். தென் மாவட்டங்களில் பாஜக ஒன்றுமே கிடையாது. பலரும் பாஜகவை அதிமுக விமர்சிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கூட்டணியில் இருந்த போதே அதிமுக பாஜகவின் கொள்கைகளோடு முரண்பட்டிருந்தது. அதை அவ்வப்போது தெரிவித்தும் வந்தது" என்று கூறினார்.
-
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
7 முறை போட்டி.. 5 முறை வெற்றி! சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கிராப் என்ன! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'?












Click it and Unblock the Notifications