பிடிஆர் ஆடியோ லீக்.. ரஃபேல் வாட்ச்.. பேனா கூட்டத்தில் சீறிய சீமான்... 2023 ஹைலைட்ஸ்
சென்னை: கடந்த 2023 ஆம் ஆண்டில் அதிகளவில் அரசியல் களத்தில் விவாதமான சம்பவங்கள் என்ன? அதிமுக, திமுக, பாஜக எனப் பல கட்சிகளின் ரகளைக் காட்சிகள் என்ன? சின்னதாக ஒரு பட்டியலை தயாரித்தோம்.
இந்த 2023இல் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை மையமிட்டு அமலாக்க ரெய்டுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. இறுதியாக அவர் கைது செய்யப்படுவார் என்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னும் தொடர்ச்சியாக ரெய்டுகள் தொடர்ந்தன.

இறுதியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது. அவருக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திமுகவின் மாஸ்டர் பிளானோடு 'இந்தியா' கூட்டணியைக் காங்கிரஸ் உருவாக்கியது கடந்த வருடத்தில்தான். அது ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது.
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் கடந்த ஜூலை மாதம் தான் தேர்வு செய்யப்பட்டார். அதைப் போல் அவரது அரசியல் எதிராக இருந்த ஒபிஎஸ் அதிமுகவைவிட்டு நீக்கப்பட்டார்.
இயற்கை பேரிடர் தமிழ்நாட்டை முடக்கிப் போட்டதும் இந்த ஆண்டின் இறுதியில் தான் நடந்தது. அதைவைத்து அரசியல் செய்ய பாஜகவும் அதிமுகவும் முயற்சி செய்தன. அது கடைசியில் பாஜகவுக்கு எதிராக மாறியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பு பெரிய அளவில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுகவுக்கும் பல பிரச்சினைகள் தொடர்பாகச் சர்ச்சைகள் தொடர்ந்து நடந்துள்ளது. அவர் தமிழ்நாடு என்பதைத் தமிழகம் என்று அரசு விழா அழைப்பிதழில் வெளியிட்டார். அது மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அப்புறம் திராவிடம் என்பதே காலாவதியான கருத்தியல் என்றார். அதுவும் விவாதமானது.
சட்டசபையில் ஆளுநர் எழுதிக் கொடுத்த உரையை வாசிக்காமல் சில விசயங்களை விட்டுவிட்டு வாசித்தார். அதுவும் விவாதமானது. பெரிய மோதலாகவே மாறியது. கடைசியாக அவையைவிட்டு பாதியிலேயே ஆளுநர் ஆர் என் ரவி வெளியேறினார். அதுவும் பெரிய புயலைக் கிளப்பி இருந்தது.
செங்கல்லை வைத்துத் தேர்தல் களத்தில் பெரிய அலையை உருவாக்கிய உதயநிதி ஸ்டாலின், இந்த ஆண்டு அதிக சர்ச்சையில் சிக்கினார். முதல் சர்ச்சை, சனாதன ஒழிப்பு மாநாட்டினால் ஏற்பட்டது.
அவரது பேச்சு இந்துக்களுக்கு எதிரானது என வடமாநிலங்களில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது. அதைப் போல் அவர் செங்கல்லைத் தொடர்ந்து நீட்டுக்கு எதிராக 'முட்டை'யை இந்த ஆண்டு கையில் எடுத்தார்.
தமிழ்நாட்டில் ஆயிரம் கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்ததும் இந்த ஆண்டில்தான். 400 ஆண்டுகளாகக் குடமுழுக்கு நடைபெறாத கோயில்களில் எல்லாம் கும்பாபிஷேகம் நடைபெற்றது பெரிய சாதனையாகப் பேசப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருந்த ரஃபேல் வாட்ச் பெரிய அளவில் சர்ச்சையானது. அவர் அந்த வாட்ச் பில்லை வெளியிட வேண்டும் என்று அன்றைக்கு மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.
அதற்குச் சரியான விளக்கம் அளிக்காமலிருந்த அண்ணாமலை, இறுதியாக ரூ.3 லட்சத்திற்கு அந்த வாட்சை வாங்கியதாக ஒரு ரசீதை வெளியிட்டார். அது கூட பில் இல்லை. சரியான பில்லை அவர் வெளியிடவில்லை என்று செந்தில் பாலாஜி மீண்டும் ஒரு புகாரைக் கிளப்பினார்.
அதற்கு இணையாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை கூறினார். இறுதியில் அவர் திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அது தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள். அதில் எதையும் அண்ணாமலை புதியதாக கண்டுபிடிக்கவில்லை என திமுக தரப்பு விளக்கம் அளித்தது.
ஆவின் தயாரிப்பான க்ரீன் பால் விற்பனை தொடர்பாக விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. இனி பச்சைப் பால் வராது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார். அதுவும் பெரிய அளவுக்கு விவாதமானது.

கிண்டியில் புதியதாகக் கட்டப்பட்ட கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையைக் குடியரசுத் தலைவர் திறந்துவைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்த விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்று செய்தி வெளியானது. அதனால், மருத்துவமனைக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலினே திறந்துவைத்தார்.
திமுகவில் பெரிய கலவரத்தை ஏற்படுத்திய நிகழ்வாக முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஆடியோ லீக் ஆனதை சொல்ல வேண்டும். அதைவைத்து அண்ணாமலை அமைச்சரவையில் மாற்றம் செய்யும் அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்.
எல்லோரும் எதிர்பார்த்த மாதிரியே நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து பழனிவேல் ராஜன் விடுவிக்கப்பட்டார். அவருக்கு வேறு இலாக்கா மாறியது. அதைப்போலவே பால்வளத்துறை அமைச்சர் பதவியை இழந்தார் நாசர்.
கடந்த சில வருடங்களாக பாஜக- அதிமுக ஆகிய கட்சிகள் இடையே இருந்த கூட்டணி முறிந்தது இந்த ஆண்டில் தான். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அந்தக் கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்குச் சென்றவர் எனச் சொல்லி இருந்தார். அது அதிமுகவில் பெரிய புயலைக் கிளப்பியது. ஆகவே, அந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செயலும் இந்த ஆண்டு சம்பவங்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடி அதிக அளவில் பேசப்பட்டார்.

ஆகஸ்ட்டில் நடைபெற்ற அதிமுக மாநாடு பெரிய அளவில் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. அங்கே போடப்பட்ட உணவுகள் குப்பைகளில் வீசப்பட்ட வீடியோக்களால் மக்களின் அதிருப்தியை எடப்பாடி சம்பாதித்தார். அந்த மாநாடு 2 பேரின் உயிரைப் பறித்திருந்ததை ஒரு முக்கிய செய்தியாகச் சொல்லவேண்டும்.
தேவர் குருபூஜையில் கலந்துகொண்ட இபிஎஸ் மீது சில காலணிகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பானது.
முன்னாள் திமுக தலைவருக்கு மெரினா கடலுக்குப் பேனா சிலை வைக்கும் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சீமான் மிகக் கடுமையாக தன் எதிர்ப்பை பதியவைத்துப் பேசினார். அதனால் திமுக, நாதக இடையே மோதல் போக்கு உருவானதும் இந்த ஆண்டில்தான்.
இந்த ஆண்டில் இறுதியாகத் தமிழக அரசியலில் பெரிய சோக நிகழ்வு ஒன்று நடந்து முடிந்துள்ளது. அது தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் மறைவு. அதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியது.
அதற்கு முன்னதாகவே அவரது கட்சியின் பொதுச்செயலாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா பதவியேற்றதும் இந்த 2023 இறுதியில்தான்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications