சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதென்ன எழுச்சி வரணும்.. ரஜினி பேசுவதெல்லாம் சும்மா ஏமாற்று வேலை.. அரசியல் நிபுணர்கள் கருத்து

Google Oneindia Tamil News

சென்னை: எழுச்சி வந்தவுடன்தான் அரசியல் பிரவேசம் என்பது ரஜினியின் ஏமாற்று வேலை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? ரஜினியின் முடிவுதான் என்ன ?

    இன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் பெரும் குழப்பமாகியுள்ளது. எழுச்சி வந்த பிறகே அரசியலுக்கு வருவேன் என கூறியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எழுச்சிக்கு நாங்க எங்க போறது என்று அவர்கள் குழப்பமாகியுள்ளனர்.

    அதேசமயம், அரசியல் மாற்றத்திற்காக 3 திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் முதல் திட்டமாக ஆட்சிக்கு வந்தவுடன் கட்சியின் பெரும்பாலான பதவியை நீக்குவது என கூறியுள்ளார்.

    பதவி

    பதவி

    கட்சியின் பெரும்பாலான பதவிகளை நீக்கிவிட்டால் கட்சியை எப்படி நடத்துவது? ஒரு வேளை இந்த 2021-ஆம் ஆண்டு நீக்கிவிட்டு பின்னர் 5 ஆண்டுகள் கழித்து அதே நபர்களுக்கு அந்தந்த பதவிகள் வழங்கப்படுமா இல்லை வேறு நபர்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி பதவிகள் மூலம் காசு சம்பாதிக்கிறார்கள் என ரஜினி கூறியிருந்தார்.

    கேள்வி

    கேள்வி

    அவ்வாறெனில் இவரது மக்கள் மன்றத்தில் ஏற்கெனே மாவட்டச் செயலாளர்கள், மன்ற செயலாளர்கள் காசு கொடுத்துவிட்டு பதவிக்கு வந்தனரா, இல்லை அவர்கள் எல்லாம் தற்போது ஊழல் செய்கிறார்கள் என ரஜினி கூறுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கருணாநிதிக்கு 70 சதவீதம் ஜெயலலிதாவுக்கு 70 சதவீதம் ஓட்டு கிடைத்தாக கூறும் இவர் வேறு ஒருவரை, பரீட்சயம் அல்லாத ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் எப்படி வாக்குகள் கிடைக்கும் என்பதை யோசிக்காமலா இருந்திருப்பார்?

    படித்தவர்கள்

    படித்தவர்கள்

    இளைஞர்களுக்கு படித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறுகிறார். திமுக, அதிமுக கட்சிகளில் தற்போது எம்எல்ஏவாக எம்பியாக முதல்வராக முக்கிய பதவிகளில் இருப்போரும் இளமை காலத்தில் கட்சியில் சேர்ந்து படிப்படியாக பதவிகளில் முன்னேறியவர்கள். நன்கு படித்தவர்கள். அப்படியிருக்க இவர் ஏதோ புதியதாக ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த போவதாக கூறுகிறார்.

    ரஜினி சொல்வது

    ரஜினி சொல்வது

    அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ள இவ்வாறு குழப்பியுள்ளதாகவே அரசியல் நிபுணர்கள் பார்க்கின்றனர். மேலும் தலைவனுக்கு அடையாளமே முன்னின்று சாதிப்பது, ஆனால் இவரோ நீங்கள் முன்னாடி போங்கள், எனக்கான இடத்தை உருவாக்குங்கள், அப்பறம் வரேன் என்கிறார்கள். எனவே மக்கள் எழுச்சிக்கு பிறகு வருவேன் என ரஜினி சொல்வது ஏமாற்று வேலை. ஒரு வேளை இவர் கட்சியை தொடங்கினாலும் இவர்தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுவர். உடனே நான் அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பையும் நாம் கேட்க இருப்பது வெகு தூரத்தில் இல்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    English summary
    Political experts says that Rajinikanth's political entry after surge is cheating one. He wont come to politics at any cost, they said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X