சென்னை ஆளுநர் மாளிகை இடத்தில் அதிரடியாக இப்படி செய்வோமே..சீண்டிய சீனியர்..பரபரக்கும் அரண்மனை ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டி ராஜ்பவன் இடம் தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்பதால் அந்த இடத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்; அதனால் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என திராவிடர் இயக்க சீனியர் தலைவர் ஒருவர் ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கூறியிருப்பதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக பார்க்கப்படுகிறது.

தலைநகர் சென்னையில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிறது ஆளுநர் மாளிகை எனப்படும் ராஜ்பவன். சென்னையின் பிரதான இடத்தில் வனம் சார்ந்த இடமாக இருக்கிறது. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே தபால்காரர் பணியை மட்டுமே செய்யக் கூடியதுதான் ஆளுநர் பணி. அத்தகைய ஒரு பணியை செய்யக் கூடிய ஆளுநருக்கு இவ்வளவு ஏக்கர் நிலப்பரப்பிலான பங்களா, மாதந்தோறும் பல கோடி ரூபாய் செலவு என்பவை எல்லாமே விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆளுநருடன் அக்கப்போர்

ஆளுநருடன் அக்கப்போர்

அதுவும் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை இல்லாத வகையில் ஆளும் அரசுக்கு வெகுவாகவே குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்திய அளவில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இரட்டை ஆட்சி நடத்த முயல்வது வாடிக்கைதான்; அதை மாநில அரசுகள் மிக மூர்க்கமாகவே எதிர்க்கவும் செய்கின்றன. இப்போது தமிழகத்திலும் அத்தகைய அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

ஆளுநருக்கு எதிரான நடவடிக்கை

ஆளுநருக்கு எதிரான நடவடிக்கை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்திலேயே திமுகவினர் முழங்கினர். ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதன் உச்சமாக தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசுதான் நியமனம் செய்யும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன், ஆளுநருக்கு அமைச்சர்கள் குடியிருப்பான சென்னை கிரீன்வேஸ் சாலையில் வீடு ஒதுக்க வேண்டும்; ஊட்டி ஆளுநர் மாளிகையை கைப்பற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தர வேண்டும் என பேசினார். இது விவாதப் பொருளானது.

டார்கெட் ஆளுநர் மாளிகை

டார்கெட் ஆளுநர் மாளிகை

இந்நிலையில் ஆட்சியாளர்களை நிகழ்ச்சி ஒன்றின் போது தனியாக சந்தித்து பேசியிருக்கிறார் திராவிடர் இயக்க சீனியர் தலைவர் ஒருவர். இச்சந்திப்பின் போது, ஆளுநருக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் எப்படியெல்லாம் எடுத்தால் நன்றாக இருக்கும் என ஆலோசனை சொல்லியிருக்கிறார் அந்த தலைவர். அதில் ஒன்றுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுகளில் ஒன்றான புதிய தலைமை செயலகத்தை ஏன் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விரிந்து கிடக்கும் ஆளுநர் மாளிகையில் அமைக்கக் கூடாது? ஆளுநருக்கு என தனி அலுவலகம் ஒன்றை மட்டும் அமைத்து கொடுக்கலாமே என கூறினாராம் சீனியர்.

பரபர ஆலோசனை

பரபர ஆலோசனை

இதனைக் கேட்டுக் கொண்ட ஆட்சித்தரப்பு அப்போதைக்கு எதுவும் பதில் சொல்லவில்லை. ஆனால் ஏதேனும் செய்தாக வேண்டும் என்பதற்காக இது தொடர்பாக சிலபல ஆலோசனைகளில் இறங்கியிருக்கிறதாம். ஆனால் ஆலோசனைகளின் போது அத்தனையும் ரெட் சிக்னலாகவே வர இது என்ன புது வம்பு என சற்றே அயர்ந்தும் போனதாம் ஆட்சித் தரப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+