திராவிடத்தை தமிழ் என கூறுகின்றனர்.. அரசியல் கட்சிகள் நம் பார்வையை குறுக்கிவிட்டன..ஆளுநர் ஆர்.என்.ரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிடம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அரசியல் கட்சிகள் குறுக்கிவிட்டன என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் "ஒரே பாரதம் உன்னத பாரதம் தொடர் திட்டம்" என்ற கருத்தரங்கு 2 நாட்கள் நடைபெறுகிறது. இதனை தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில், பாரதம் என்ற சொல், ஆங்கிலேயர்கள் இந்தியா என்று பெயர் வைப்பதற்கு முன்னதாக வந்தது. பாரதியார் கூட பல பாடல்களை பாரதம் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு

ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு

வெள்ளையர்கள் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கிறார்கள்,. ஆனால் அது உண்மையில்லை. இந்தியா என்பது எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள் 1905ம் ஆண்டு வங்கத்தை மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என்று மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் வா.உ.சிதம்பரனார் போராடினார். பஞ்சாபில் நடந்த ஜாலியன் வாலாபாத் சம்பவத்தை எதிர்த்து காமராசர் போராடினார். எங்கோ நடக்கிறது என அமைதியாக இருக்கவில்லை.

பாரதம் பற்றி விளக்கம்

பாரதம் பற்றி விளக்கம்

இந்தியாவை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் பாரதம் என்பது யாரோ ஒருவரின் கீழ் இருப்பதில்லை. எப்போதும் தர்மத்தை கடைபிடிப்பதாக இருந்தது. அரசர்கள் தர்மத்தை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இமயம் முதல் குமரி வரை பாரதம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னதாக கூறப்பட்டுள்ளது.

 திராவிடம் என்றால் தமிழ் மட்டுமல்ல

திராவிடம் என்றால் தமிழ் மட்டுமல்ல

1956ம் ஆண்டு வரை மதராஸ் மைதானமாக இருந்தது. அதன்பின்னர் மொழி அடிப்படையில் கேராஅ, கர்நாடகா, ஆந்திரா என அரசியலுக்காக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான், நீ என்று பேசி வருகின்றனர். தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என்று கூறப்பட்டு வருகிறது.

அரசியல் செய்வார்கள்

அரசியல் செய்வார்கள்

அரசியல் கட்சிகள் நமது பார்வையை குறுக்கிவிட்டன. அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்காக மொழி அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், சாதி மற்றும் அதன் உள்கட்டமைப்புகளையும் வைத்து அரசியல் செய்வார்கள். இதனை நமக்கு தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இந்தியா என்பது அடிப்படையில் அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமைதான் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+