பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே... திமுக பேரணியில் தலைவர்கள் முழக்கம்
Recommended Video
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னையில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்திய பேரணியில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
''பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே'' என்ற முழக்கத்தை ஓங்கி எழுப்பிய படி அனைத்துக் கட்சி தலைவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, என பலரும் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முழக்கத்தை உச்சரித்தபடியே நடந்து சென்றனர்.

ஓங்கி ஒலிப்பு
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே புறப்பட்ட திமுக பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது. வழிநெடுகிலும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

எங்கள் ரத்தம்
''பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே'', '' எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம் ஈழத்தமிழர்களும், இஸ்லாமியர்களும் எங்கள் ரத்தம்'', ''வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.. குழி பறிக்கும் சட்டம் வேண்டாம்'' என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

துணை போகாதே
மத்திய அரசுக்கு அதிமுக அரசு துணை போகக் கூடாது என்றும், ஈழத்தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துவிட்டதாகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அதிமுக எம்.பி.க்களை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் ஒலித்தன.

தொடர்கோஷம்
பேரணி நடைபெற்ற சுமார் ஒன்றை மணி நேரமும் தொடர்ந்து முழக்கங்கள் ஒலித்தபடியே இருந்தன. இடைவிடாமல் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறே அமைதியான முறையில் பேரணி நிறைவடைந்தது.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications