நிர்மலா தேவி... அவ்வளவும் நடிப்பு கோப்பால்.. கலகல சர்வேயில் பரபர முடிவு!

நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் டிராமா என்று மக்கள் கணித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Nirmala Devi : தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்- வீடியோ

    சென்னை: நம் மக்களிடம் என்னே ஒரு தெளிவு.. நிர்மலாதேவி அன்று ஒருநாள் செய்தது எல்லாமே டிராமா என்று பெரும்பாலானோர் சொல்லி விட்டார்கள்!

    தைரியமான, படித்த, துணிச்சலான ஒரு பெண்.. அதிலும் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி. ஒன்றரை வருடங்களாக நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டார். பலமுறை தலைப்பு செய்திகளாக மீடியாவில் இடம் பிடித்து வருபவர்.

    ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கும் வரும்போதும், போகும்போதும் தமிழக மக்களால் இவரது நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. அதனால்தான் இவரது செய்கைகள் நான்கு நாட்களுக்கு முன்பு வித்தியாசத்தை தந்தது.

    மல்லிகைப்பூ

    மல்லிகைப்பூ

    கோர்ட்டுக்கு எப்போது வந்தாலும் டிப்-டாப்பாக டிரஸ் செய்து கொண்டும், கழுத்து நிறைய நகைகள், தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வருவார் நிர்மலாதேவி. அப்படித்தான் நாலு நாளைக்கு முன்னாடியும் கோர்ட்டுக்கு வந்தவர், திடீரென வினோதமாக நடக்க தொடங்கினார்.

    பேய் பிடிச்சிருக்கு

    பேய் பிடிச்சிருக்கு

    முடியை வெட்டி காதில் தொங்க விட்டு கொண்டார், பிறகு அவிழ்த்து கொண்டார், நான் தான் காமாட்சி அம்மன் என்றால், ராத்திரி நேரத்தில் தலைவிரிகோலமாக தர்காவுக்குள் நுழைந்து "பேய் பிடிச்சிருக்கு" என்று அலப்பறையை தந்து, அருப்புக்கோட்டையை அலற வைத்து விட்டார். இதெல்லாம் ஒரே நாளில் பார்த்து மிரண்டு போன நமக்குதான் பேய் பிடிச்ச மாதிரி ஆகிவிட்டது.

    நார்மல் மோடு

    நார்மல் மோடு

    ஆனால் மறுநாளே நார்மல் மோடுக்கு வந்து விட்டார் நிர்மலா. தன் வக்கீலுக்கு போனை போட்டு, "எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்று அவரே கேட்டார். இப்படி போனில் கேட்கப்பட்டது ரெக்கார்ட் செய்யப்பட்டு அதுவும் வைரலானது. இதற்கு பிறகு நிர்மலா தேவி எப்படி இருக்கிறார் என்ற தகவல் நமக்கு கிடைக்கவில்லை.

    ஆப்ஷன்கள்

    ஆப்ஷன்கள்

    இருந்தாலும் அன்றைய தினம் நிர்மலாதேவியின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்று குழம்பி கிடந்த நம் மக்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது. அதாவது நிர்மலாதேவி செய்வது டிராமாவா, உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கிறாரா, தெரியலையே என்பன ஆப்ஷன்களாக தரப்பட்டிருந்தன.

    கருத்து கணிப்பு

    கருத்து கணிப்பு

    ஆனால் நம் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நிர்மலாதேவி செய்வது டிராமா என்று 72.66 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். அதாவது மக்களின் பார்வையில் அவர் நடிப்பதாக கருத்து பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கு 19.49 சதவீத மக்களும், தெரியலையே என்பதற்கு 7.85 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர்.

    நல்லது

    நல்லது

    இதன் மூலம் நமக்கு என்ன தெரியவருகிறது என்றால், யார், என்ன, எப்படி, எங்கு, எவ்வாறு.. நடந்து கொண்டாலும் அதை நம் மக்கள் சரியாக சீர்தூக்கி பார்த்து, தெளிவாக உள்ளார்கள் என்பது புரிகிறது. இப்படி இருப்பதால்தான் நம்ம ஆட்களை யாராலும் அசைச்சுக்க முடியறது இல்லை! இருப்பினும் உண்மையிலேயே நிர்மலா தேவி பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை யாராவது மன நல மருத்துவர்கள் தெளிவுபடுத்தினால் அவருக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+