டேய் உன்னை நம்பிதானே வந்தேன்.. அடிக்காதீங்க.. நெஞ்சில் இடியாய் இறங்கும் பொள்ளாச்சி பெண்களின் குரல்
பலாத்காரம் செய்யும் இளம்பெண்ணின் குரல் கேட்போரின் மனதை பிசைகிறது.
Recommended Video

சென்னை: "அண்ணா.. பெல்ட்டால என்னை அடிக்காதீங்கன்னா.. " என்று அந்த இளம்பெண் கெஞ்சிக் கேட்கும் குரல் நெஞ்சில் இடியாய் வந்து விழுகிறது.
பெண்களை மிரட்டி பணிய வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த பொள்ளாச்சி சம்பவம் கேள்விப்பட்டு ஒரு வார காலத்திற்கும் மேலாகிறது.
இளைஞர்கள் பொதுவாக இப்படித்தான் மிரட்டி பெண்களை பணிய வைத்திருப்பார்கள் என்று இதை ஒரு குத்துமதிப்பாகத்தான் நம்மால் யூகிக்க முடிந்தது.

யார் வீட்டு பெண்ணோ?
ஆனால் கைதானவர்களிடமிருந்து ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதை பார்த்தால் மனம் பதைபதைக்கிறது. நெஞ்சு துடிக்கிறது. யார் வீட்டுப் பெண்ணோ இப்படி சிக்கிக் கொண்டாளே என்ற தாய்மை உணர்வில் மனம் அழுகிறது.

அரைகுறை ஆடை
ஒரு அறைக்குள் ஆண்கள் நுழைவதும், அவர்களது சைகைகளும் அந்த வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோவில் உள்ள அந்த பெண்ணின் அலறல், கிட்டத்தட்ட மரண ஓலம்போல்தான் இருக்கிறது. அறைக்குள் இருந்த காதல் ஜோடி போல அது. அரைகுறை ஆடையுடன் காதலனுடன் அந்த பெண் இருக்கும்போது, திடுதிப்பென்று அயோக்கியன் திருநாவுக்கரசு தலைமையிலான கும்பல் உள்ளே நுழைகிறது.

வீடியோ குரல்
இதை பார்த்து மிரண்ட அந்த பெண் "டேய் உன்னை நம்பிதானே வந்தேன்" என்ற பயம் கலந்து அதிர்வுடன் அந்த வீடியோவில் குரல் ஒலிக்கிறது. நான்கைந்து ஆண்கள் நடமாட்டம் அந்த அறைக்குள் இருக்கிறது. "என்னை விட்டுரு" என்று கையெடுத்து கும்பிட்டு நடுங்கி அழுகிறாள் பெண்.

அடிக்காதீங்கண்ணா
இதேபோல, இன்னொரு வீடியோவில், அண்ணா.. பெல்ட்டால என்னை அடிக்காதீங்கன்னா.. நானே பேன்ட்டை கழட்டிடறேன்" என்று இளம்பெண் கெஞ்சிக் கேட்கும் குரல் நெஞ்சில் இடியாய் வந்து விழுகிறது. நடுநடுவே விக்கி விக்கி, கதறி கதறி, அழுது கடைசியில் ஈனஸ்வரத்தில் பெண்ணின் குரல் செத்துபோய் கேட்கிறது!

செருப்பால அடிக்கணும்
உண்மையிலேயே இது தமிழ்நாடுதானா? இவனுங்க எல்லாம் மனுஷ ஜென்மங்கள்தானா? என்றுதான் கேட்க தோன்றுகிறது. வீடியோவில் அந்த இளம்பெண்ணின் குரலை கேட்க, கேட்க, கையில் செருப்பு கிடைத்தால், அது பிஞ்சு போகும்வரை அடிக்கலாம் என்றே தோன்றகிறது. துப்பாக்கி இருந்தால் அந்த நொடியே சுட்டு தள்ளினாலும் ஆத்திரம் நமக்கு அடங்காது என்றே தெரிகிறது!

அயோக்கிய கழிசடைகள்
ஒட்டுமொத்த தமிழகத்திலும், பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தாயும், தந்தையும், குடும்பங்களும் உறைந்து போய்க் கிடக்கின்றன. இந்த கடைந்தெடுத்த அயோக்கிய கழிசடைகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர காவல்துறை உறுதியோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அரசியல் குறுக்கீடுகள் வந்தாலும் அதை காவல்துறை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். குறுக்கீடு செய்பவர்களையும் தூக்கி உள்ளே வைத்து லாடம் கட்ட வேண்டும். குற்றவாளிகள் எந்த வகையிலும் தப்பாமல் தடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தேடித் தர வேண்டியது காவல்துறையின் கடமை என்று பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications