Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசுக்கு வந்த "மர்ம" வலி.. அடுத்த நாளே அதிமுக புள்ளி கைது!.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் 3 பேர் கைதாகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 3 குற்றவாளிகளை போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் தமிழக அரசியல் பெரும் திருப்பத்தையும், சலசலப்பையும், சந்தேகங்களையும், கேள்விகளையும் உள்ளடக்கி வருகிறது!

பொள்ளாச்சி சம்பவத்தை இன்னும் நம்மால் மறக்கவே முடியவில்லை.. 1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், 300க்கும் மேல் இளம்பெண்களை துடிக்க துடிக்க பாலியல் பலாத்காரம் செய்தது அந்த கும்பல்.. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் திருநாவுக்கரசு.

எம்பிஏ படித்து விட்டு, பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர்.. 400 பெண்களை சீரழித்தவர்களில் கைதானவர்கள் 4 பேர்! ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில்தான் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது.

 சோதனை

சோதனை

இந்த பங்களாவில் சோதனை நடத்தியபோதுதான் ஏராளமான பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியனர்.. அந்த வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகளும் சிதறி கிடந்ததை கண்டு போலீசாரே அன்று அதிர்ந்தனர்.. இது தொடர்பாக திருநாவுக்கரசுடன், சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்..

 மீண்டும் கைது

மீண்டும் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைதானார்கள்.. பிறகு குண்டர் சட்டமே ரத்து செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இவர்கள் பலமுறை ஜாமீன் கோரியும், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.. இந்த நேரத்தில் மற்றொரு அதிர்ச்சியாக சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடையதாக அதிமுகவைச் சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். மூன்று பேரும் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, 3 பேரையும் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 என்ன காரணம்?

என்ன காரணம்?

இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. சம்பந்தப்பட்ட லீடர் திருநாவுக்கரசுக்கு 2 நாளைக்கு முன்பு உடம்பு சரியில்லாமல் போனது.. அதனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.. டாக்டர்கள் செக் செய்து பார்த்ததில், திருநாவுக்கரசு ஆணுறுப்பில் வீக்கம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது..

 திருநாவுக்கரசு

திருநாவுக்கரசு

பிறகு அந்த ஆஸ்பத்திரியிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சையும் தரப்பட்டது. இங்குதான் ஒரே மர்மமாக இருக்கிறது.. திருநாவுக்கரசு ஆஸ்பத்திரிக்கு வந்ததற்கும், இப்போது 3 பேர் கைதானதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற ரீதியில் சந்தேகம் கிளம்பி உள்ளது.

 மாணவரணி செயலாளர்

மாணவரணி செயலாளர்

அதேபோல, இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இதில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் ஆவார்.. ஆனால், இந்த கைது நடவடிக்கை வெளியே தெரிந்ததுமே அருளானந்தத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்.. அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது... எனினும் அருளானந்தம் "மணி"யான அமைச்சர் ஒருவருடன் தொடர்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

 அதிமுக

அதிமுக

ஆனால், சுமார் ஒன்றரை வருஷங்களுக்கு பிறகு இந்த வழக்கில் 3 பேர் கைதாகி உள்ளது அதிமுகவுக்கு பாஜக வைக்கும் ஒரு "செக்"காகவே பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஆளுங்கட்சியை நெருக்கும் நோக்கிலும், மறைமுகமான மிரட்டல் விடுக்கும்தொனியிலுமே இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவும் உண்மையா என்று தெரியவில்லை..

திமுக

திமுக

ஆனால், சீட் கேட்டு நெருக்கடி தருவதற்காக இப்படியெல்லாம் பாஜக, அதிமுகவை பகடைகாயாக பயன்படுத்தினால், அதன் பலன்கள் அனைத்தையுமே திமுகவே அறுவடை செய்யும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.. இப்போதே ஸ்டாலின், கனிமொழி போன்றோர் இந்த விவகாரத்தை இன்றே பேச ஆரம்பித்துவிட்டனர்.. அதனால் கூட்டணி பிரச்சனை, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது என்பதையும் மறுத்துவிட முடியாது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+