தமிழ்நாடு, மேற்கு வங்கம்.. தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எகிறும் வெயில்! உஷார் மக்களே!
சென்னை: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இரண்டு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, இயல்பை விட 2 - 3°C வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் 38°C வரை வெப்பம் பதிவாகலாம். ஆனால், காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக இது 43°C வெப்பத்தைப் போல உணரப்படும். வேலூர், கரூர் மற்றும் திருச்சி போன்ற உள் மாவட்டங்களில் வெப்பம் 40°C-ஐத் தொட வாய்ப்புள்ளது என சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, பல மாவட்டங்களில் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டி பதிவாகி வருகிறது. புருலியா மற்றும் கிழக்கு பர்த்வான் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலும் ஈரப்பதமும் சேர்ந்து வாக்காளர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் என அலிபூர் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், தேர்தல் ஆணையம் மற்றும் சுகாதாரத் துறை வாக்காளர்களுக்குப் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மதிய நேரத்தைத் தவிர்த்து, காலையிலேயே அல்லது மாலை 4 மணிக்கு மேல் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்றும், போதிய அளவு தண்ணீர், இளநீர் அல்லது மோர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள் எனவும், குடை, தொப்பி அல்லது கைக்குட்டையைப் பயன்படுத்துங்கள். தளர்வான பருத்தி உடைகளை அணிவது சிறந்தது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications