2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்!
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.
Recommended Video
சென்னை: கலகலப்புகள், தகராறுகள், பஞ்சாயத்துகள், பரபரப்புகள், குழப்பங்கள், உயிரிழப்புகள், என எல்லாமே கலந்து இன்றைய தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 73.70 சதவீத வாக்குகள் பதிவானது. ஆனால் இந்த முறையோ 72 சதவீத அளவில்தான் அது வந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட ஒரு சதவீதம் குறைந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வாக்காளர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில் தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட தோற்றுப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும்.

உடல்நலன்
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் மக்கள் கூடி விட்டனர். தனிநபர்கள்கூட தங்கள் ஜனநாயக கடமை பற்றி அறிந்திருக்கிறார்கள். போதுமான அரசியல் ஞானமும், சமூக சூழலையும் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் வெயிலையும், உடல்நலனையும் பொருட்படுத்தாமல் வந்து ஓட்டு போட்டதை பார்த்த இளசுகள் கொஞ்சம் ஜெர்க் ஆகி போனது உண்மையே.

ஆளுமைகள்
ஒருசில குறைபாடுகள் இருந்தாலும் இந்த வாக்கு சதவீதம் குறைந்தது யாரும் எதிர்பாராதது. குறிப்பாக கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இது. தலைவர்களை பார்த்து, அவர்களால் ஈர்க்கப்பட்டு, ஓட்டு போடும் சூழ்நிலை இப்போது இல்லை. இவையெல்லாவற்றையும் தாண்டி வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

மறியல்
ஓசூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்களுக்குப் போக முடியாமல் தவித்தனர். சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னாலும், முக்கிய பஸ் ஸ்டேண்டுகளில் பஸ் கிடைக்காமல் மக்கள் மறியல் செய்ததுதான் மிச்சம். ஒருவேளை உரிய முறையில் பஸ்களை ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் வாக்கு பதிவு அதிகமாகி இருந்திருக்கும்.

கள்ளழகர்
அதேபோல, மதுரையில் இன்று சித்திரைத் திருவிழா விஷேசம்.. அழகர் ஆத்துல இறங்க போகிறார். இதனால் இரவு 8 மணி வரை வாக்குபதிவு நேரம் நீடித்தாலும், வைபவ நிகழ்வு காரணமாக எத்தனை பேர் ஓட்டு போட்டார்கள், அதற்கான சூழலில் அவர்கள் இருந்தார்களா என தெரியவில்லை. ஒருவேளை கள்ளழகர் விசேஷம் இல்லையென்றாலோ அல்லது வேறு நாளில் வாக்குப் பதிவை நடத்தியிருந்தாலோ, மதுரையில் இன்னும் வாக்கு பதிவு நிறையவே விழுந்திருக்கும்.

பூத் சிலிப்
ஆதார் அட்டை இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் என இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும் நிறைய பேருக்கு ஓட்டு போட முடியாமல் போனதும் நடந்தது. ஒருவேளை தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தால் இந்த வாக்கு சதவீதமானது 80 சதவீதமாகக் கூட உயர்ந்திருக்கலாம். ஆனால் மொத்தமாக பல காரணிகள் வாக்கு சதவீதத்தை குறைத்து விட்டன என்பதே உண்மை.
இந்த வாக்குப் பதிவால் யார் பலனடையப் போகிறார். யார் நஷ்டப்படப் போகிறார் என்பது மே 23ம் தேதி தெரிய வரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications