உள்ளே வந்த விஜயதாரணி! பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பறிபோகும் வாய்ப்பு? "குமரி" மொத்தமாக போச்சே!
சென்னை: பாஜகவில் இணைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு கன்னியாகுமரியில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2014 லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரியில் இருந்து பாஜக சார்பாக எம்பியாக வென்றவர் பொன் ராதாகிருஷ்ணன். அதன்பின் 2019 லோக்சபா தேர்தலில் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரை எதிர்த்து தோல்வி அடைந்தார் பொன் ராதாகிருஷ்ணன். அதன்பின் 2021 லோக்சபா இடைத்தேர்தலில் விஜய் வசந்த் இதே தொகுதியில் வென்ற நிலையில்.. பொன் ராதாகிருஷ்ணன் கிட்டத்தட்ட 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு கன்னியாகுமரியில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயதாரணி கட்சிக்குள் வரும் பட்சத்தில்.. மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் மூத்த பொன் ராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் ஓரம்கட்டப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜயதாரணிக்கு கன்னியாகுமரியில் களமிறங்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் விளவங்கோடு எம்எல்ஏவாக இருப்பதால்.. கட்சி தாவல் தடை சட்டத்தின்படி அவரின் எம்எல்ஏ பதவி காலியாகும். இதனால் அங்கே இடைத்தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் விஜயதாரணி களமிறங்க வாய்ப்புகள் குறைவு. இதனால் அவர் லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரியில் இருந்து களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவில் இணைந்த விஜயதாரணி; கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி. ஆனால் இவர் மட்டுமின்றி இன்னும் சிலர் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
வாய்ப்பு இல்லை: காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விஜயதாரணி முயன்று உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்எல்ஏ விஜய் வசந்த் தொகுதியில் போட்டியிட்டு தேசிய அரசியலுக்கு செல்ல இவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அவர் பாஜகவில் இணைந்துவிட்டார் என்கிறார்கள். இதனால் பாஜகவில் இவருக்கு தென் மண்டலத்தில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்கிறார்கள்.
என்ன சொன்னார்?: கட்சி மாறியது தொடர்பாக பேசிய விஜயதாரணி, சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன்; தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது;
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்; தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்; தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது; பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை வரவேற்பு; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில் , காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்; விஜயதாரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழ்நாடு பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications