Pongal 2026: பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? சூரிய வழிபாடு செய்வது எப்படி?
சென்னை: தமிழர் திருநாளாம் தை பொங்கல் வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பதையும் வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: ஒரு பக்தர் நல்ல புடவை கட்டிக் கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, புடவை ஆணியில் மாட்டி கிழிந்துவிட்டது. பிறர் மீது பொறாமை எண்ணம் இருந்தால், இப்படியான விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும்.

போகி பண்டிகை என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் ஆகும். வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பதோடு, மனதில் இருக்கும் கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய குணங்களையும் எரிக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான தத்துவம். இந்த நல்ல நாளில் மனதை தூய்மை ஆக்க விரதம் மேற்கொள்ளுங்கள்.
போகி அன்று வீட்டு தெய்வத்தை வணங்குவது வழக்கம். ஜனவரி 14, 2026 புதன்கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த பூஜையை செய்யலாம். கலசத்தில் நீர் நிரப்பி, மஞ்சள், எலுமிச்சை, ரூபாய் நாணயம், வேப்பிலை வைத்து வீட்டு தெய்வத்தை எழுந்தருளச் செய்து வணங்குங்கள்.
வெள்ளை சாதம், தயிர், வெள்ளைக்கட்டி, வாழைப்பழம் வைத்து படைத்து குலதெய்வத்தையும் பிரார்த்தியுங்கள்.
தை பொங்கல் வைக்க நல்ல நேரம்
தை பொங்கல் ஜனவரி 15, 2026 வியாழக்கிழமை வருகிறது. சூரிய பொங்கல் வைக்க காலை 4:30 மணி முதல் 6 மணி வரை உகந்தது. முடியாதவர்கள் காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை அல்லது 10:35 மணி முதல் 11:30 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். சூரிய பகவானுக்கு மஞ்சள், இஞ்சி, கரும்பு, வாழை, காய்கறிகள் படைத்து நன்றி சொல்லுங்கள்.
மாட்டு பொங்கல் அன்று முன்னோர்களுக்கு படையல் இடுவது வழக்கம். ஜனவரி 16, 2026 வெள்ளிக்கிழமை காலை 9:10 மணி முதல் 10:20 மணி வரை அல்லது 12 மணி முதல் 1:30 மணி வரை படையல் போடலாம். சிலருக்கு மாலை 6 மணிக்கு மேல் படையல் போடும் வழக்கம் இருந்தால் நேரம் குறித்து கணக்கிட்டுக் கொள்ள வேண்டாம்.
சர்க்கரை பொங்கல், சுண்டல், வடை மற்றும் முன்னோர்கள் விரும்பிய உணவுகளை படைத்து வழிபடலாம். வசதி இல்லாதவர்கள் நந்தி பகவானை வழிபடலாம். காணும் பொங்கல் அன்று குருமார்களுக்கும் பெரியோர்களுக்கும் பரிசு கொடுத்து ஆசி பெற வேண்டும்.
ஆசிரியர்கள், ஆன்மீக வழிகாட்டிகள், மற்றும் நம் நலன் விரும்பும் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவது இந்த நாளின் சிறப்பு. இந்த பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், இறை அருளுடனும் கொண்டாட வேண்டும் என தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications