தமிழக அரசின் பொங்கல் பரிசு பணம் ரூ.3 ஆயிரம்.. யாருக்கெல்லாம் கிடைக்காது?
சென்னை: தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகை ரூ.3 ஆயிரம் யாருக்கு எல்லாம் கிடைக்காது என்பதை பார்க்கலாம். அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகை அளிக்கப்பட உள்ள நிலையில், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. இதனால் தகுதி அடிப்படையில் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பாக பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு தரப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்க உள்ளதாக தெரிய வந்தது.

கடந்த ஆண்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டுமே அளிக்கப்பட்டதால், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ரொக்கம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இது தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காலத்தின் போது கூட பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2,500 அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை அதனை விடவும் அதிகமாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பிலேயே அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடைக்காது.
இதனால் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்போர், தகுதி அடிப்படையில் அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய ரேஷன் அட்டைகள் தகுதியான பயனாளிகள் பலருக்கும் அளிக்கப்படவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன் அவர்களின் ரேஷன் கார்டுகள் ஆக்டிவ் ஆகவில்லை என்றால், லட்சக்கணக்கானோருக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications