ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த காந்தி! பொங்கல் பண்டிகைக்கு முன்பே வேட்டி, சேலை! தேதி பாருங்க
சென்னை: தாயுமானவர் திட்டத்தில் சென்னையில் 4 நாட்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பே ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி, பெரும் மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் காந்தி காஞ்சிபுரத்தில் சொன்ன சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே அடிப்படையாக கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதற்காகவே தாயுமானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், 21.70 லட்சம் ரேஷன்தாரர்களின் வீடுகளுக்கு, மாதந்தோறும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதற்காகவே வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவைகளில் வைத்து, ஊழியர்கள் எடுத்து சென்று விநியோகித்து வருகிறார்கள்.. இந்த ரேஷன் பொருட்களின் விநியோக தேதி எப்போது? என்பது குறித்து அந்தந்த ரேஷன் கடைகளின் அறிவிப்பு பலகையிலிருந்தே குடும்ப அட்டைதாரர்கள் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் தாயுமானவர் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வடகிழக்கு பருவமழை காலம் தற்போது துவங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இந்த மாதம் முதல் வாரத்திலேயே, அதாவது, 3, 4ம் தேதிகளிலேயே வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
அந்தவகையில் சென்னையில் 4 நாட்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் நடக்க போகிறதாம். இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம் சா.பாபு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்..
தாயுமானவர் திட்டம் சபாஷ்
அதில், "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
நவம்பர் 2025 திங்களுக்கு 03.11.2025 முதல் 06.11.2025 வரை சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.
காந்தி குட்நியூஸ்
இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு, மகிழ்ச்சி தகவல் ஒன்றை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் புனரமைக்கப்பட்டுள்ள முருகன் கூட்டுறவு சங்கம் விற்பனை நிலையத்தை, தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர். காந்தி குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்தார்.
பொங்கலுக்கு வேட்டி சேலை
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காந்தி, "திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ்கிறார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுகள்தான் உண்மையான பட்டு.. எனவே அவைகளை உத்திரவாதத்துடன் விற்பனை செய்கிறோம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
58 சொசைட்டிகள்
மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.. திமுக ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ₹800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நெசவாளர்களுக்கு ₹800 முதல் ₹1500 வரை கூலி கிடைக்கிறது
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ₹9 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டது. 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்க தொடங்கியிருக்கின்றன" என்றார் அமைச்சர் காந்தி.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications