ஆம்னி அலறவிடுதே.. அரசு பஸ் திணறடிக்குதே.. சென்னை டூ கோவை கட்டணம் எவ்ளோ பாருங்க.. தமிழக அரசு முடிவு?
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், ஆம்னி பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு கவலையை தந்து வருகிறது.
இது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகி வருகிறார்கள்.. அந்தவகையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடவும் தயாராகி வருகிறார்கள். இதனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிட்டுள்ளது..

நன்மைகள்: வழக்கமாக பண்டிகை நேரத்தில், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்யும். அந்தவகையில், ஜனவரி 15ம் தேதி தைப்பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 புதன்கிழமை உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன.
எனவே, இந்த முறை, சனிக்கிழமையன்றே விடுமுறை ஆரம்பமாகிவிடுவதால், 13 முதல் 17ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், ஜனவரி 12ம்தேதியே வெளியூருக்கு பயணமாக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்துவிட்டது.. அதேபோல, வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன.. எனவே,
பொங்கல் பண்டிகை: எனவே, பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவாகி உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, சிறப்பு பஸ்கள் 11-ந் தேதி முதல் இயக்க திட்டமிடப்பட்டு இருந்தது. 12, 13, 14 ஆகிய நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அதிகளவில் இருப்பதால் 3 நாட்களும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது..
இதற்காக ஆம்னி பஸ்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் அரசு பஸ் தொழிலாளர்கள் திடீரென ஸ்டிரைக் அறிவித்துவிட்டார்கள்.. இதனால் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பும் தாமதம் ஆகி கொண்டிருக்கிறது. இதையே சாக்காக வைத்து, ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்திவிட்டார்களாம்.
படுக்கை வசதி: இதுகுறித்து பயணிகள் சொல்லும்போது, "தென்மாவட்டங்களுக்கு பயணிக்க எப்படியும் 9 மணி நேரமாகி விடுகிறது.. அதனால்தான், படுக்கை வசதியுள்ள பஸ்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான அரசு விரைவு பேருந்துகளில் ரிசர்வேஷன் முடிந்துவிட்டது. அதனால்தான் ஆம்னி பஸ்களை ரிசர்வ் செய்ய முயன்றோம்.
சென்னையில் இருந்து கோவைக்கு AC பஸ்ஸில் செல்ல ரூ.5 ஆயிரம் கேட்கிறார்கள்.. மதுரை, நெல்லை போன்ற மாவட்ட பகுதிகளுக்கு வருகிற 12-ந்தேதி பயணம் செய்ய ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இருக்கைக்கே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க இணையதளத்தில் இப்படி கட்டணம் எதுவும் குறிப்பிடவில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, அதிக கட்டணம் கேட்கிறார்கள். அதனால், ஊருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது..
கோரிக்கை: அனைத்து ரயில்களிலும், எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன. வந்தே பாரத் ரெயிலிலும் புக்கிங் ஆகிவிட்டன. அதனால், அரசு பஸ்கள் மட்டும் தான் ஒரே வழி. பொங்கல் பண்டிகை காலம் மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் போன்றவற்றை கருத்தில்கொண்டு ஆம்னி பஸ்களில் இந்த வருடமும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications