தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்! புத்தாடைகள் அணிந்து தை 1ஐ வரவேற்ற தமிழர்கள்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளை தமிழர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழா, தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாளாக திகழ்ந்து வருகிறது. இது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட விவசாய திருநாளாவும் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக பொங்கல் நன்னாள் பார்க்கப்படுகிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகள் என்றால் குறிப்பிட்ட மதத்தினர் அவரவர் பண்டிகைகள் கொண்டாடுவார்கள். ஆனால் தை முதல் நாளான பொங்கல் பண்டிகையை மட்டும் தான் சாதி, மத வேறுபாடின்றி தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.

மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாகத் தைப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் புத்தாடைகள் அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து தை 1ஐ உற்சாகமாக வரவேற்றிருக்கிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications