என்ன தொங்கிருச்சு.. அதுக்குள்ளயே “Waiting List”.. பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சுமார் 6 லட்சம் பயணிகள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி ஒன்பதாம் தேதி முதலான பொங்கல் பண்டிகை பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே பெரும்பாலான ரயில்களில் 'வெயிட்டிங் லிஸ்ட்' காண்பிப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலங்களில், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். குறிப்பாக, பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படும் பெருவிழா என்பதால், ஊருக்குச் சென்று குடும்பத்துடன் கொண்டாட அனைவரும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

Pongal Train irctc

தமிழகத்தின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகிப் பண்டியையுடன் தொடங்குகிறது. ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் ரயில் முன்பதிவு

இதனையடுத்து சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, பொதுப் போக்குவரத்தான் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் ரயில் சேவையை அதிகமாக நாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே துறையில் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஆர்சிடிசி பதிவு

பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு ரயில்வே துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாதாரணமாக ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யலாம். அதன்படி, ஜனவரி 9 முதல் 18 வரை நடைபெறும் பொங்கல் பண்டிகை பயணத்துக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 8) முதல் காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பயணிகள் தங்கள் பயணத் தேதிகளை கவனமாகத் தேர்வு செய்து உடனே பதிவு செய்து கொள்ளுமாறு IRCTC தெரிவித்துள்ளது.

கூடுதல் ரயில்கள்

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கடந்த வார கணக்குகள் படி, ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் சுமார் 6 லட்சம் பேர் ரயில் வழியாக சொந்த ஊர்களுக்கு ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். இதனால், அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் சில மணி நேரங்களிலேயே நிரம்பி விடுகின்றன. இதனையடுத்து பொங்கல் வாரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா என்பதற்கான முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று தென் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் சிறப்பு ரயில்கள்

கடந்த ஆண்டு போல், இந்த ஆண்டும் கூடுதல் "சிறப்பு ரயில்கள்" இயக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் போது IRCTC இணையதளம் (www.irctc.co.in) அல்லது IRCTC மொபைல் ஆப்பை பயன்படுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதேபோல், அருகிலுள்ள ரயில் முன்பதிவு மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை காலத்தில் மிகுந்த கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை கடைசி நேரம் வரை காத்திராமல் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வெயிட்டிங் லிஸ்ட்

தாமதம் ஏற்பட்டால், டிக்கெட்டுகள் விரைவாக விற்றுத் தீரும் வாய்ப்புள்ளது. என்பே பயணத்திற்கான திட்டமிடலை முன்பே செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், பலரும் இன்று காலை முதலே IRCTC தளத்தில் முன்பதிவு செய்வதற்காக ஆன்லைனில் காத்திருந்தனர். வைகை, பாண்டியன், நெல்லை உள்ளிட்ட பிரபல ரயில்களின் டிக்கெட்டுகள் ஏற்கனவே "Waiting List" நிலைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+