பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? இன்னைக்கு முக்கியமான நாள்! ஈசியா ரயில் டிக்கெட் எடுக்க ‘இதை’ பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களின் பெருவிழாவான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 12) முதல் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போல, பண்டிகை சீசனில் டிக்கெட் தேவை அதிகரிப்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல ரயில்களின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுவது வழக்கம். இதனால், இந்த ஆண்டும் பயணிகள் அதிக ஆர்வத்துடன் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட ஆரம்பித்துள்ளனர்.

பொங்கல் என்பது தமிழர்களான முக்கியமான பண்டிகையாகும். குடும்பத்துடன் சொந்த ஊர்களில் கொண்டாடும் இந்த விழாவுக்காக, லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களை நோக்கி புறப்படுகின்றனர்.

சுமார் 15 லட்சம் பேர் வரை சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரயில்கள் மூலம் மட்டும் சுமார் 7 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

Pongal Train irctc

பொங்கல் ரயில் டிக்கெட்

எனவே இந்த பொங்கல், பயணிகளின் பெரும் தேவையை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வழியாக 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு கன்பார்ம் டிக்கெட் பெறுவதற்கும், கடைசி நேர அவசரத்தைத் தவிர்ப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி 11 முதல் 18 வரை பயணம் செய்யும் பயணிகள், தங்கள் டிக்கெட்டுகளை நவம்பர் 12 முதல் 19 வரை முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு தொடக்கம்

ஒவ்வொரு பயணத் தேதிக்கும் அதற்கேற்ற முன்பதிவு தேதி உள்ளது. அதாவது, பயண தேதிக்கு சரியாக 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் திறக்கப்படும். பொங்கல் பண்டிகை நாட்களில் டிக்கெட்டுகளுக்கான தேவை மிக அதிகம் இருக்கும் என்பதால், பயணிகள் தாமதிக்காமல் தங்களது டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. டிக்கெட்டுகள் IRCTC இணையதளம், அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள், ரயில்வே முன்பதிவு மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக பெறலாம்.

ஆன்லைனில் முன்பதிவு

ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் வாலெட் பேமெண்ட் போன்ற பல்வேறு வழிகள் மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பயணிகள் தங்கள் டிக்கெட் விவரங்களை PNR எண் மூலம் சரிபார்த்து, மொபைல் SMS மூலமாகவும் அல்லது பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இது காகித டிக்கெட்டின் தேவையை குறைக்கும் வகையில் வசதியான முறையாகும். பொங்கல் காலத்தில் வழக்கமான ரயில்களுக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்பதிவில்லா பெட்டி

அதனால், பொங்கல் பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைக்கும் பயணிகள் இன்று முதல் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பண்டிகைக் காலங்களில் அதிக அளவு கூட்டம் திரளும் என்பதால் முன்பதிவில்லா ரயில்கள், முன்பதிவு ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+