பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா? பொருட்கள் தரம் இல்லையா? புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இதுதவிர இலவச வேட்டி, சேலையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன்கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான அரிசி மற்றும் சர்க்கரை 100 சதவீதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு வினியோகிக்கப்பட்ட வேட்டி-சேலைகளில் 80 சதவீதம் மட்டுமே மக்களால் நுகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் நுகர்வு செய்யப்பட்ட வேட்டி சேலைகளில் 100 சதவீதம் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நுகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், எஞ்சிய வேட்டி, சேலைகள் குடோன்களில் இருப்பு இருப்பதாகவும் தேவைப்படும் ரேஷன் கடைகளுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, முழு கரும்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 50 முதல் 80 சதவீதம் கரும்புகள் நகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், கரும்பை பசுமையாக வழங்கும் நோக்கத்தில் இது போன்று விநியோகம் செய்யப்படுவதாகவும், தொடர்ந்து தேவையான அளவு கரும்புகள் மாவட்ட நிர்வாக குழுக்களால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு பசுமையாகவே வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.3 ஆயிரம் ரொக்கத் தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வெளிப்படையாக வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. டோக்கன் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பொங்கல் பரிசு தொகுப்புகளை அவர்கள் குறிப்பிடும் நாட்களில் வந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications