பொங்கல் பரிசு.. ஜனவரி 12ல் ரேசன் கடைகளுக்கு நோ லீவு.. டோக்கன் முதல் விநியோகம் வரை முழு விபரம்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளதால் வரும் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில் வரும் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரைக்கும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை கொண்டாடும் தமிழக மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை, பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.1967, 1800 425 5901 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தினசரி கண்காணிக்க தொடர்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 9ஆம் தேதி வரைக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு பொருட்கள் வாங்குவதற்கான நாளும் நேரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெறலாம்.
ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஜன.13 ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்; ஜன.13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள், ஜனவரி 14ஆம் தேதி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் அன்றைய தினம் ரேசன் கடைகள் திறந்திருக்கும் என்றும் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications